இன்று ஆலயம் நிறைந்த உறவுகள் கூடி உற்சாகமாக சிரமதானப் பணிகள் ஊறணியில் நடை பெற்றன.இன்றைய சிரமதான வேலைகளுக்காய் பயன் படுத்தப்பட்ட JCB – பைக் கோவிற்கான பணம் 25000 ஐ அன்பளிப்பாக வழங்கிய ஜெறாட் – சரோஜினி குடும்பத்தினருக்கும் இன்றைய மதிய போசனத்திற்குரிய செலவான 5000 ரூபாவை அன்பளிப்புச் செய்த புஸ்பராஜா குடும்பத்தினருக்கும் மற்றும் சிரமதானப் பணியில் பங்கேற்று தம் பணியாற்றிய அனைத்து உறவுகளுக்கும் அருட்தந்தை சார்பிலும் ஆலய நிர்வாகத்தின் சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இதுவரை விடுவிக்கப்படாதிருந்த ஆலயத்தின் எஞ்சிய காணி முழுவதும் இன்றைய தினம் இராணுவத்தினரால் கம்பிக்கட்டைகள் அகற்றப்பட்டு ஆலயத்தின் பாவனைக்காய் திறந்து விடப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.