Home / திட்டங்கள் / கடலணை 27.07.23 / கடலணை ஆரம்ப வேலைகள்

கடலணை ஆரம்ப வேலைகள்

கடலணை தொடர்பான சில பதிவுகள் இது கடந்த 28 ஆம் திகதி urany Viber இல் விஜயகுமாரண்ணாவினால் பதிவேற்றம் செய்யப்பட்டது.
அன்புறவுகளே வணக்கம் .
கடலணை தொடர்பாக சில விளக்கங்கள் தரலாம் என எண்ணுகின்றேன் .
போக்குகள் வைக்கலாம் என்ற திட்டம் தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ளது அவ்வளவு தான்.
காரணம் போக்குகளை கொண்டு வருவதில் உள்ள தாமதங்கள் , கனரக வாகனங்கள் பிரச்சனை, பெருமளவான பணச்செலவு போன்றனவும் அத்துடன் கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் ஆலோசனைகளும் திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்க வேண்டுமென்ற நெருக்குதல்களும்தான் .
இந்த நிலையில் அடுத்த மாரியில் இருக்கின்ற கரையில் மேலும் 5,10 அடிகளை இழந்து விடாமல் அரிப்பு அதிகமாக உள்ள இடத்தில் உடனடியாக எம்மிடம் உள்ள பெரும் கற்களைப் பயன்படுத்தியும் வைப்பிலுள்ள பணத்தைச் செலவிட்டும் செய்யக்கூடிய அணை வேலைகளை செய்வதென தீர்மானிக்கப்பட்டு 27-07-2023 நேற்றைய தினம் 11.00 மணியளவில் கரை. பாது. திணைக்களஉத்தியோகத்தர்களின் முன்னிலையில் அவர்களின் அளவீட்டின் அடிப்படையில் அணைக்கான ஆரம்ப வேலைகள் தொடங்கி இன்றும் தொடர்ந்து நடைபெறுகின்றது .
ஆரம்ப வேலையாக திரு. பொன்ராசா அவர்களின் காணியிலிருந்து கடற்கரை அந்தோனியார் சுரூபம் வரையான பகுதி அளக்கப்
பட்டு வேலை நடைபெறுகிறது .எம்மிடம் உள்ள கற்களைக் கொண்டு இத்தூரத்தை செய்யலாம் என்று எண்ணியுள்ளோம் .
மேற்கொண்டு கற்களைப் பெற திரு. சாந்தசீலனின் உதவியுடன் கற்களின் அளவு, தொகை பணச்செலவு பற்றிய மதிப்பீடுகள் பொறியியலாளரிடம் கோரப்பட்டுள்ளது.
கிடைத்தவுடன் பதிவிடுகின்றேன்.
மேலுமாக கரை.பாது. திணைக்களத்தினை மேவி எம்மால் இவ்வேலையை செய்ய முடியாது. அவர்களின் ஆலோசனைகளும் ஒத்துழைப்பும் எமக்கு அவசியமானதாகும் .
.பணவசதியும் கனரக வாகன உதவிகளும் தாராளமாக கிடைக்கும் பட்சத்தில் மிகுதிக்கரைகளையும் சரிவர அணையிடலாம் . Bபோக்குகளையும் கொண்டு வரமுடியும் .
மேலும் அரிக்கப்பட்ட கரையானது ( சொந்தக்காணியாக ) இருந்தாலும் அது அரச உடமையாகிவிடும் . எனவேதான்அரிக்கப்பட்ட கடலின் கரையை மீளவும் நாம் பிடிக்க முடியாது. ஆனாலும் அரிபட்ட கரை மேலும் அரிபடாது பாதுகாக்கவே இவ்வணைக்கு அனுமதி தந்துள்ளோம் என நேற்றையதினம் வந்திருந்த உத்தியோகத்தர்கள் கூறியிருந்தார்கள் .
ஆகையால் தற்போதுள்ள நிலப்பகுதியிலிருந்து 8 அடி வீதி வரக்கூடிய வகையில் 10 அடி.தூரத்திலே கரையின் வளைவிற்கேற்பவே அணை போடப்படுகின்றது .
15 அடி தூரமாவது தரும்படி கேட்டிருந்தோம் . ஆயினும் மறுத்துவிட்டனர். ஆக, மிக மிக சிரமப்பட்டே இவ்வாரம்ப வேலைகளை தொடங்கியுள்ளோம் . அனைவரதும் ஒத்துழைப்பு , உதவிகளை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும்
– உங்களின் உறவுகள் –
அத்துடன் தற்போது அணை அமைக்கும் செயின் டோசர் இயந்திரத்திற்கான கூலியாக மணித்தியாலத்திற்கு 8000 /- வழங்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது .
சாதாரணமாக ஒரு நாளுக்கு 8 மணித்தியாலங்கள் வேலை நடைபெறுகின்றது .
ஏற்கனவே தங்களால் இத்திட்டத்திற்கென அனுப்பப்பட்டிருந்த பணத்தில் வாய்க்கால் பாதை வேலை முடிய மிகுதியாக இருந்த பணமான ருபாய் 910 000 /- நிரந்தர வைப்பிலிட்டிருந்தோம் .அப்பணமானது இன்றைய தினம் மீளப் பெற்ற போது 11 75 055 /- ருபாவாக கிடைத்துள்ளது .
இப்பணம் முலமே தற்போதைய வேலைகளை செய்கின்றோம் .
அன்புடன் நன்றிகள் .

About ratna

slot anti rungkat 2023>BEJOBET: Situs Slot Online Gacor Anti Rungkat Terbaru 2023 slot anti rungkat 2023>MPOSUN: Link Situs Judi Online Slot Gacor Terbaru slot gacor >BEJOBET: Situs Judi Online Slot Gacor Terbaik Di Indonesia slot gacor 2023 > daftar situs slot gacor 2023 terpercaya nomor 1 Di Indonesia Gampang Menang