இந்தியாவிலிருந்து சூப்பர் Singer புகழ் ராஜகணபதியுடன் இந்தியாவில் அடையார் இசைக்கல்லூரியில் தனது டிப்ளோமா கல்வியை கற்றுவரும் மேரி மடோனா, ஈழத்து சௌந்தரராஜன் என்று மக்கள் மனதில் என்றும் இடம்பிடித்திருக்கும் N.ரகுநாதன் மற்றும் லண்டன் மண்ணில் வாழும் கலைஞர்கள் சிறீபதி, பாரதி , செல்லக்குழந்தைகள் தேனுகா, மாதுளானி இணைந்து சிறப்பித்த Super Singers Night 2018 நிகழ்ச்சி மிக பிரமாண்டமாக நேற்று 17.03.2018 நடைபெற்றது.
மண்டபம் நிறைந்த ஆதரவுடன் நடைபெற்ற இந்த நிகழ்வை பிரபல ஒலி/ஒளிபரப்பாளர் எஸ் கே குணா சிறப்புடன் தொகுத்து வழங்கினார்.பாடல்களுக்கும் ஆடல்களுக்கும் ஓய்வில்லாமல் இசை என்னும் இன்ப வெள்ளத்தில் அனைவரும் இசைந்திருந்தது அரங்கில் சிறப்புடன் வெளிப்பட்டது.
நிகழ்வில் இடையில் உரையாற்றிய காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரி பழைய மாணவர்கள் பிரித்தானிய கிளையின் தலைவர் திரு சண்முகநாதன், இன்றைய கல்லூரியின் இன்றியமையாத தேவைகளை சுட்டிக்காட்டினார்.மூடப்படும் தருவாயில் சென்று மீண்டிருப்பதாக மேலும் குறிப்பிட்ட அவர் அதற்காக இருக்கும் காத்திரமான பணிகள் குறிப்பிட்டு தொடர்ந்த ஆதரவையும் வேண்டினார்.
http://www.vetrinadai.com/social/super-singer-musical-night-kks-nadeswara-college/