ஊறணி கனிஷ்ட வித்தியாலயத்திற்கு இரண்டு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்வூர் மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தார்கள்.
அண்மையில் மீளக்குடியமர்ந்த பகுதியான வலி வடக்கு, காங்கேசந்துறை ஊறணியில் இருக்கும் ஒரே பாடசாலையான மேற்படி கனிஷ்ட வித்தியாலயத்தில் ஆசிரியர்கள் நியமிக்கப்படாமையினால் அவ்வூர் மக்கள் வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இதைத் தொடர்ந்து குறித்த வலயக் கல்விப் பணிப்பாளர் அக்கறை எடுத்து இப்பாடசாலைக்கு கடந்த திங்கட்கிழமை தொடக்கம் இரண்டு ஆசிரியர்களை நியமித்துள்ளார். இதனால் அம்மக்கள் கல்விப் பணிப்பாளருக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து இன்று வெள்ளிக்கிழமை வடமாகாண கல்வி அமைச்சர் க.டெனீஸ்வரன் நேரடியாக இப்பாடசாலைக்கு விஜயம் செய்து மேலதிக நிறை குறைகளை ஆராய்ந்து சென்றுள்ளார்.