நாளும் வேளை எழுந்து
எமை எழுப்பி
காலை கடன்கழிக்ககவனமாய் பல்துலக்க
பயிற்ச்சி தந்து
பாலைப் பருகக் கொடுத்து
பட்டாடை உடுத்தி
பள்ளிக்கு அனுப்பிவைத்த
அம்மா
நாளை நல்மனிதராய்
நாம்வாழ
வேலை தேடிக்கொள்ள
வெற்றி வாழ்வைப்
பெற்றுக் கொள்ள
அன்றே கல்விப் பாதைகாட்டி
ஆற்றலும் அறிவும்பெற
ஏற்றமாய் எமை வழிநடத்தும்
எங்கள் பிரியஅம்மா
மாலை
படித்துக் களைத்து
வீடுவருகையிலே- நல்ல
மணக்கும் பலகாரம்
இனிக்கும் தேனீரும்
எடுத்துவைக்கும்
எங்கள் இனிய அம்மா
ஓடி விளையாடி
நோவு சுழுக்கு வந்தாலும்
உரசிக் கால்கையில்
இரத்தம் வடிந்தாலும்
பதறிப் பரதவித்து
பலமாய் பணிவிடைகள்
செய்யுமெங்கள்
பாசமிகு அம்மா
நோயில் நாம்படுத்தால்
நொடிப் பொழுதில் மருத்துவரை
தேடிப் போய் பார்த்து
பெறுகின்ற மருந்துகளை
நேரம் தவறாமல்
இரவு பகல்
நித்திரையும் கொள்ளாமல்
வேளையெல்லாம்
விழித்திருந்து எமக்களித்து
கண்ணை இமைக்காப்பதுபோல்
காலமெல்லாம் காத்துவரும்
அம்மா
பருவமகள் ஆனபின்பும்
பார்ப்போர் பார்வைக்குணம்
பழுதென்றால்
கண்ணிவலைவிரித்து (கண்ணில் வலை)
கவலையாய் காத்துவரும்
அம்மா
எம்
பெரிய பரிட்சைகளில்
பின்னும் முன்னும்
படிபடி என
எமைவிரட்டி- தன்
உடல்வலி
உச்சம் தொட்டாலும்
உள்ளும் புறமும்
உளவதைகள்
உலுக்கி எடுத்தாலும்
எமக்கெல்லாம் பணிசெய்து
எம்மைவிட இரட்டிப்பு
இரத்தக் கொதிப்போடு
எம் பரிட்சை எல்லாமே
தன் பரிட்சை போல
எதிர் கொண்டு
வெற்றிப் பெறுபேறு
எட்டும் வரை
நெஞ்சில் முள்சுமந்து
சுற்றிவரும் சுமைதாங்கி
அம்மா
நாளை நாம் அம்மாவாய்
ஆவதற்கு
நல்வாழ்வு பெறுவதற்கு
காலமெல்லாம் உழைத்து
கடவுளிடம் வரம் கேட்டு
காத்திருக்கும் அம்மா
கூடி அவள்வயது நாளை
கூனிப் போனாலும்
ஏணிபோல் நாமுயர
என்னாழும் பாடுபடும்
நேரில்வாழும் தெய்வமடி
அம்மா
இப்படிக்கு : பிள்ளைகள்
Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?
Your article helped me a lot, is there any more related content? Thanks!
purchase stromectol online – ivermectin 6mg for humans for sale order tegretol sale
Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?
isotretinoin 20mg canada – brand dexona buy zyvox online cheap
order amoxicillin for sale – amoxil sale order combivent 100mcg without prescription