ஊறணியின் உயர்கல்வி முதல் மகன்
ஊரின் உயர் பதவி மேன்மகன்
பல்கலைக்கழகம் சென்று பொறியல்
பட்டம் பெற்ற பெருமகன்
குடும்பத்து வறுமை துடைத்து
உடன்பிறந்தோர் பெருமையுற
வளர்த்துவிட்ட மாமகன்
நல்ல மனிதராய் வாழ்ந்த
பாமரன் தவஞானதாஸ்சவன்
புனிதருக்கு புதுக் கோவில்
அமைத்து விடத் துடிப்போடு
வரைபடங்கள் வடிவமைத்து
வந்தங்கு கை கொடுத்து
பொறுப்போடு பணி செய்து
பொலிவோடு கோவிலெள
தோள் கொடுத்த பூ மகன்
எடுப்பான தொழிலிருந்தும்
எளிமையாய் வாழ்ந்த மகன்
என்ன அவசரமோ
இப்படிப் போய்விட்டானே
இப்படி இருக்கலாமா ? என்று
எண்ணுகின்றதென்மனம்
வன்னியிலே புறப்பட்டோருக்கு – அங்கு
வண்ணமனை அமைக்க
திண்ணமது கொண்டு
திடீரென்று போனாயோ
கண்ணிரெண்டும் இருக்கின்றது- இனிக்
காண்போமோ உம் உருவம்
எண்ணி எண்ணி இதயம் வெடிக்கின்றது
ஏன்னையா இந்த வேகம்
உன்னைக் கரம்பிடித்த உத்தமிக்கும்
உன்னால் உருவான பிள்ளைகட்கும் – எம்
இரங்கல் செய்தியினை
இவ்விடத்தில் தெரிவிக்கின்றோம்
-ஊரவன்