சீரேதும் பாராது
சின்னத்தங்கச்சி -நீ
எடுத்தாய்
ஊரேதும் சொல்லாது
அவளை
உயர்வாய் வைத்திருந்தாய்
பேர்சொல்ல
பிள்ளைகள் நான்கு கண்டாய்
ஊரை இடிக்காது
உண்மைகளை நொறுக்காது
உழைப்பால் உயர்வடைந்தாய்
சீறிவரும் கடல் அலையை
சிரிப்போடு எதிர்கொண்டாய்
ஏறி ஏறி கடல் ஓடி
எங்களை வளர்த்தெடுத்தாய்
இரவென்றும் பகலென்றும்
மழை என்றும் குளிரென்றும்
சுளிப்பேதும் இல்லாமல்
உழைப்பாயே-அந்த
உறுதியை எனக்கருள்வாய்
இவ்வுலகில் நான்
பெற்ற சுகமெல்லாம்
நீ தந்த கொடையன்றோ
பொன்னுலகம் போறவனே
மண்ணுலகில் உன்னைப்போல்
நான் வாழ -வரம் தாரும் ஐயாவே
பிள்ளைகள் கண்டாய்
பேரன் பேத்திகளையும்
நீ கண்டாய்
பூட்டன் பூட்டியையும் பார்த்த
பூரிப்பில் போனாயோ
தீர்ப்பிடாது தீங்கேதும் செய்யாது
காந்தியின் பொம்மைகள் போல்
வாழ்ந்து
சாந்தியும் பெற்றாய்
இது ஒன்றும் முற்றும் அல்ல
பூமியை விட்டு புறப்படும்
புதுப்பயணம்
உயிர் கொண்டு போகின்ற
உன்னதப் பெரும்பயணம்
உன் அன்னை காத்திருப்பாள்
உனைக்கண்டு பூத்திடுவாள்
என் பொறுப்பு
என் கடமை
என் இருப்பு
எல்லாம் முடிந்தபின்னால்
உனைத்தேடி
நான்வருவேன்
அதுவரை காத்திருப்பாய்
ஐயனே பார்த்திருப்பாய்
எமது தந்தையின் (அந்திரேசப்பு-சின்னத்துரை) மரணச்சடங்கில் பங்கெடுத்தோர்க்கும் தொலைபேசிஇ தொலைநகல்இ இணையம்இ கடிதங்கள் ஊடாக துயர் பகிர்ந்தோர்க்கும் தாயகத்திலும் புலம்பெயர்மண்ணிலும்பல்வேறு நெருக்கடிகளால் வரமுடியாது தொடர்புகொள்ளமுடியாது அவரவர் இடங்களில் இருந்துகொண்டே எமது தந்தையின் ஆன்மசாந்தி வேண்டி செபித்தொர்க்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.
இப்படிக்கு
அவர் பிள்ளைகள்.