31-01-2017
ஏற்கனவே திட்டமிட்டவாறு நாளை மறுதினம் செவ்வாய்க் கிழமை ( 31.01.2017) பிற்பகல் 3.30 மணிக்கு ஊறணி தற்காலிக ஆலயத்தில்
திருப்பலி ஒப்புக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
29-01-207
ஏற்கனவே திட்டமிட்டவாறு நடக்கவிருக்கும் திருப்பலியை முன்னிட்டு நாளை ஞாயிற்றுக்கிழமை (29.01.2017)காலை 9.00 மணிக்கு ஊறணி புனித அந்தோனியார் ஆலய வளவில் சிரமதானம் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஊறணி அந்தோனியார் அடியவர்களையும் இதில் கலந்து கொண்டு ஒத்துழைப்பு நல்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
22-01-2017
நாளைய தினம் 22.01.2017 ஞாயிற்றுக்கிழமை, பலாலி புனித ஆரோக்கியமாதா ஆலயத்தில் காலை 9.00 மணிக்கு அருட்தந்தை ஜெயக்குமார் அடிகளாரின் தலைமையில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படவிருக்கிறது. புனித செபஸ்ரியார் ஆலய மக்களும், புனித ஆரோக்கியமாதா ஆலய மக்களும் இணைந்து ஏற்பாடு செய்திருக்கின்றனர். இத் திருப்பலியில் அருட்தந்தை T.தேவராஜன் அடிகளார் கலந்து கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
17-01-2017
அனைத்து ஊறணி உறவுகளுக்கும் ஓர் அன்பான அறிவித்தல்- நாளைய தினம் (17.01.2017) ஊறணி புனித அந்தோனியார் ஆலய வளவில் DAN TV உடன் சந்திப்பு ஒன்றுக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. எமது விடயங்களை மீளவும் எடுத்துச் சொல்வதற்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. எனவே அனைவரும் நாளை செவ்வாய்க்கிழமை மாலை 3.30 மணிக்கு ஊறணிக்கு வருகை தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.