ஏறக்குறைய 2003 கார்த்திகையில் இலண்டனிலும் 2004 ஆனியில் பாரீசிலும் நடந்தேறிய புலம்பெயர்வாழ் ஊறணிபங்குமக்களுக்கான ஒன்றுகூடல்களில் தாய்நிலத்திலே துன்புற்றுவாழும்
எம்மக்களுக்காக எவ்வகை உதவிகளை எப்படியெப்படிச்செய்யலாம் என்பதுபற்றி அருட்திரு இராயனும் குட்டியும் நானும் எடுத்துரைத்து உதவிக்கான ஒருங்கிணைப்பை ஏற்படுத்தியதைப்போன்றே, பணியாளர் ஞானசீலன் அவர்களும் தன்மார்க்கு-நோர்வே-இலண்டன்-Nஐர்மனி-கனடா போன்ற நாடுகளுக்குச்சென்று பணச்சேகாpப்பிலும் ஒருங்கிணைப்பு முயற்சிகளிலும் இறங்கியிருந்தார்.எம்மவருடைய வீடுகளுக்குசெல்வதற்கான மகிழுந்து வசதி கிடைக்காதபோதிலும் தொடருந்துகளிலும், பேருந்துகளிலும் பயணப்பட்டுப்பயணப்பட்டு எல்லோரையும் சந்தித்து உரையாடி எம் சமுதாயத்திற்கான உதவிகளை பெற்றுக்கொண்டார் அவர் எனக்கு அண்ணனாக இருக்கின்றபோதிலும், அண்ணன் சொல்வதைதம்பி கேட்டுசெய்வதைபோல் நான் கூறியவற்றை எல்லாம் மறுப்பின்றியும் தருக்கமின்றியும் மனம் கோணாது ஏற்றுசெயல்பட்ட அவருடைய பெருந்தன்மை நச்சவும் மெச்சவும் கூடியதே.
இளவாலை கென்றி அரசர்கல்லூரியில் தன்னுடைய கல்வியை முடித்துக்கொண்டு கொழும்பு நிறுவனமொன்றில் பாதுகாப்பு ஊழியராகவும் கப்பலில் அலுவலராகவும் ஊறணியில் வணிகராகவும் கொக்கிளாயில் சம்மாட்டியாராகவும் சமுதாய பொருண்மிய ஏற்றங்களைகண்டு வாழ்வைநோக்கியபோதிலும், 1983 இனவழிப்பு நடவடிக்கைகளால் அவற்றை இழந்து ஏதிலியாகி இறங்குமுகமானபோதும், பின் அவுåதிரேலியாவுக்குப் புலம்பெயர்ந்து மீண்டும் செழுமையான வாழ்வைகைபற்றியபோதிலும் நடட இரவில் குடை பிடிப்பார்போல் அதிகம்பீற்றிக்கொள்ளாது இயல்பாகவே வாழ்வைநோக்கினார். அந்நிலையிலிருந்துதான் பிறருக்காகப் பணிபுரியத்தன்னை ஆயததப்படுத்தினார், களமிறங்கினார். எத்தனைபேர் இவரைப்போல பொதுவாழ்வுக்குத்தங்களை ஈகம் செய்துள்ளார்கள்?
2003 தொடக்கத்தில் தனது விடுமுறையைநாட்களை கழிக்க அங்கிருந்து தமிழீழம்சென்ற பணியாளர் ஞானசீலன் அவர்கள் பின்னர் இலண்டன் சென்று தன்மார்க்கிற்கு வந்துசேர்ந்தார் வந்தவரிடம் எம்மவர்பற்றியும் வேறு பல செய்திகள் பற்றியும் கேட்டு கேட்டு அறியாதவற்றிற்கும் தொpயாதவற்றிற்குமென ஒட:டு மொத்தப் பதிலுகளை அறிந்துகொண்ட சமயத்தில்தான், ஊறணியில் திருநாள் கொண்டாடக்கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் அதற்காக ஒரு தொகைப் பணத்தை சேர்த்துக்கொண்டுபோனால் அதுவொரு உதவியாக அமையுமென்றும் அவர் தம்மனகிடக்கை வெளிப்படுத்தினார்.
அதற்குப்பதில் சொல்ல உடன் என்னால் முடியவில்லை நான்குநாட்களின் பின்பே பின்வரும் செய்தியை கூறினேன். ஆதாவது ஊரிழந்தும் உறவிழந்தும் நிலையான தொழிலின்றியும் ஏதிலிகளாக வாழ்வை நோக்கி நிற்கின்ற எம்மக்களுக்காக, பயனுள்ள வகையினாலான ஒருங்கிணைந்த உதவிகள் வழிமுறைகள் எவற்றையும் செய்யாது செய்யவும் முனையாததுடன் திருநாள்கொண்டாடவும் செலவுசெய்யவும் இப்படிபணம்சேர்க்க முனைவது இச்சமயத்தில் பொருத்தமானதொரு செயலாக இருக்கமாட்டாது என்பதுடன் அவர்களின் வயிற்ரெரிச்சலை கிளறிவிடுவதாகவும் அமைந்துவிடும்.
ஆகையால் இங்கு ஓர் அமைப்பைதோற்றுவித்து உதவலாம் ஏற்கனவே இதுபற்றி அருட்திருவும் நானும் உரையாடி வருகின்றோம். கடந்த ஆண்டுகளில் அருட்திரு மற்றும் இரத்தினாவதி, இரவீந்திரன், ருபீ, அருட்பிரகாசம், பாமினி முத்துலிங்கம் போன்றோரால் ஊறணி மக்களுக்கு வழங்கப்பட்ட உதவிகள் ஒருங்கிணைப்புடன் கூடிய திட்டமின்மை காரணமாக அதிகப்பயன்பாட்டை வழங்கவில்லை எனவேதான் அமைப்பினூடாகச்செயற்படவிரும்புகிறோம.;
இதில் நீங்களும் இணைந்துபணியாற்றலாம். காலவோட்டத்தில் பலரின்விருப்பங்கள் நிறைவேறுவதுபோல உங்களின்விருப்பமும் நிறைவேறும் என்று குறிப்பிட்டபோது மறுப்பேதுமின்றி அக்கருத்தினை ஏற்றுச்செயல்பட முன்வந்தார். நம் சம்மாட்டியாரின் பொதுநலவாழ்வின் பங்கேற்பென்பது இப்படித்தான் தன்மாக்கிலிருந்து தொடங்கியது. புpன்பு நோர்வே, இலண்டன் சென்று தன்முதற்கட்ட பணியினை முடித்துக்கொண்டார். மீண்டும் இவ்வாண்டிலும் ஊறணி தூய அந்தோனியாரின் திருநாட்பலியில் பங்கேற்றுவிட்டு இலண்டனுக்கு வந்தவர் அங்கும் பின்பு Nஐர்மன், கனடா ஆகிய நாடுகளில் நடைபெற்ற ஒன்றுகூடல்களிலும் பணவீட்டுதலிலும்பங்கேற்றுத் தன்பணியினை முடித்துக்கொண்டார்.
ஏறக்குறைய 25.04.2003 ல் தொடங்கபெற்ற திருவாளர் ஞானசீலன் அவர்களின் பணிவிபரங்கள்.
தன்மார்க் : 4700 குரொணர்
நோர்வே : 4000 குரொணர்
இலண்டன் : 950 பவுண்
இப்பணம் அடைக்கலமாதா பாடசாலை அதிபரான திரு செபத்தியாம்பிள்ளை அவர்கள் தனது காசகத்தில் வைப்புசெய்துள்ளார்.
2003ல் ஆற்றிய பணிகளைப்போன்றே 2004லும் Nஐர்மன் கனடா இலண்டன் போன்ற நாடுகளிலும் ஆற்றயுள்ளார். Nஐர்மனில் செல்வம் பெனடிக்ரா இணையரில்லதில் நடைபெற்ற ஒன்றுகூடலில் உதவித்திட்டங்கள் பற்றி எடுத்துக்கூறி ஒப்புரவுபெற ஊக்கமளித்துள்ளார் அத்துடன் செல்வத்தைப் பணியாளராகச்செயல்படவும் ஒப்புதலைப் பெற்றுக்கொண்டார். அதுபோல்தான் கனடாவிலும் வின்சன் இணையரில்லத்தில் நடைபெற்ற ஒன்றுகூடலிலும் பணியாளராக இராயினிகுயின்ரச அமர்த்தப்பட்டுள்ளார்.
Nஐர்மனில் : 1150 யுரொ
கனடா : 1250 டொலர்
இலண்டன் : 150 பவுண்
நன்றி
ஒப்புரவன், 06.10.2004
stromectol for lice – buy atacand 8mg sale carbamazepine without prescription
accutane online buy – decadron generic linezolid pill
purchase amoxil sale – amoxicillin online buy buy ipratropium 100 mcg generic
azithromycin 250mg canada – order zithromax pills purchase bystolic without prescription