Home / கட்டுரைகள் / நான் பிறந்தமண்….

நான் பிறந்தமண்….

அந்தோனியார் காலடியில் அனுதினமும் தொழுது அற்புதமான ஆலயம் எழுப்பிய எம்மவரை அன்போடு இணையவும்இ அவர்கள் எங்கு வாழ்ந்தாலும் தொடர்புகள் ஏற்படுத்தி அவர்களின் விருப்பு வெறுப்புக்கள்

பகிர்ந்து எல்லோரும் மகிழ்ந்து வாழ வழிசெய்யும் நோக்கோடு ஏற்படுத்தப்பட்டதுதான் இந்த இணையத்தளம்.புலம் பெயர்ந்து வாழும் ஊர் உறவுகள் நண்பர்களை நேருக்கு நேர் தரிசிக்காமல் அவர்களின் சுக துக்கங்களையும் அபிலாசைகளையும் தற்கால மின்இயல் சாதனங்களின் ஊடாக பகிரவும்இ மீளவும் பிறந்தமண்ணில் கால் பதிக்கும் கனவுகளில் வாடிப்போயிருக்கும் நெஞ்சங்களை தரிசிக்க தளம் ஏற்படுத்தி கொடுப்பதும் இந்த தளத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். மேலும் கலாச்சார மாற்றத்தினால் மனம் நொந்து சோர்ந்து போயிருக்கும் நம்மவர்க்கு இந்த இணைப்பால் ஆறுதல் அளிக்கவும்இ குடும்ப பிளவுகளையோஇ பிள்ளைகளின் உயர் கல்வி மேம்பாட்டிற்கான ஆலோசனைகள் பெயற தவிக்கும் பெற்றோரின் மனக்குளப்பங்களையோ கேட்டறிந்து அவர்கள் அவர்களின் உறவுகளோடு இணைத்து நேசக்கரம் நீட்டி உறவாட வைப்பதும் இதன் நோக்கமாகும். முன்னொருபோதும் நம்மவர்களால் பார்த்தும் கேட்டம் அறியாத தற்கால விஞ்ஞானஇமின்னியல்இ இலத்திரனியல்இ மருத்துவ அதிசயங்களை ஒருவரோடு ஒருவர் பகிர்ந்து கொள்ளவும் இந்த தளத்தினூடாக தகவல்களை பரிமாறவும் வழிசமைத்துக் கொடுப்பதும் இதன் நோக்கமாகும். இதுவரை நாளும் நம் நண்பர்களையோஇ உறவுகளையோ தொடர்பு கொள்ள தொலைபேசியைத்தான் நம்பியிருந்தோம். ஆனால் இந்த இணையம் ஊடாக உடனுக்குடன் தொடர்பை ஏற்படுத்திஅவர்களோடு உறவாடி மகிழ களம் அமைத்துக் கொடுப்பதும் இதன் நோக்கமாகும்.

எம்மைப்பற்றி
இந்து சமுத்திரத்தின் தெற்கு எல்லையில்இ பேதுருமுனை என ஆங்கில ஆக்கிரமிப்பாளர்களால் வர்ணிக்கப்பட்ட இலங்கையின் வடகோடிமுனைக்கு வடமேற்கே இருபதுகிலோமீற்றர் தொலைவில் பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ள சிறு கிராமம் தான் நாம் பிறந்த மண். இயற்கையாக ஊற்றெடுத்தப் பாயும் நன்னீர் ஊற்று (வரைபடம் பார்க்க) யாருக்கும் உதவாமல் இந்துசமுத்திரத்தில் கலப்பதனால் என்னவோ எங்களு10ர் ஊறணி என அழைக்கப்பட்டது. குhங்கேசன்துறைஇ மயிலிட்டி (வீரமாணிக்கதேவர் துறை)தையிட்டி போன்ற ஊர்கள் நம் அயல் கிராமங்களாகும். புpறப்பால் கத்தோலிக்கராக பிறந்த நாம் நம் ஜ10வனத்திற்கு கடலையே நம்பியிருந்தோம். கடந்த அரைநூற்றாண்டு காலமாக அரசாங்க உத்தியோகத்தரையோஇ பெருவர்த்தக நிறுவனங்களையோ நம்மூர் மக்கள் பெரும்பாலும் நம்பியிருக்கவில்லை. மாறாக ஆழ்கடல் மீனபிடி (வழிச்சல் வலை) அல்லது கரை தெரியும் கடல் எல்லை வரை கட்டுமரத்தில் சென்று(அறக்கொட்டியான்இ சூடைவலை) மீன்பிடி மற்றும் தூண்டல் உதவியோடு மீன்பிடித்தல் போன்ற துறைகளில் தான் எம்மக்கள்கவனம் சென்றது. இரண்டு மைல் தொலைவில் பாரிய சீமேந்துச் தொழிற்சாலை இருந்தும் மாத ஊதியத்திற்கு வேலைபார்க்கும் மனப்பக்குவம் யாருக்கும் இருந்ததில்லை. இந்துசமயமும் கலாச்சாரங்களும் அயல் கிராமங்களில் பரவி இருந்தாலும்இ அவைகளைப் பற்றி அறியவேண்டும் எனும் ஆர்வம் யாருக்கும் இருந்ததில்லை. அவ்வளவு சமயப்பற்றுக் கொண்ட எம்மவர்கள் அந்தோனியாரைத் தவிர வேறுமார்க்கம் இல்லை என ஒரு அசைக்கமுடியாத நம்பிக்கையோடு வாழ்ந்தார்கள். புpறமக்களோடு எந்த பிணக்கும் இல்லாமல் அமைதி விரும்பும் மக்களாக வாழ்ந்த மக்கள் அரசியல் ரீதியாக தமிழரசுக் கட்சியையும்இ தந்தை செல்வாவையும் ஆதரித்தும் சமயரீதியாக யாழ் மேற்றாசனத்தையும் தங்கள் இருகண்களாக போற்றி மதித்து அமைதியாக வாழ்ந்து வந்தார்கள். கிராம அபிவிருத்திச் சங்கம்இ பாடசாலைஇ வாசகசாலைஇ உதைபந்தாட்டக் குழுஇ நாட்டுக் கூத்து கலைஞர் குழுஇ நாடக நடிகர் குழு என இவர்கள் பொழுதுபோக்கள் எல்லையின்றி விரிவடைந்தன. இலங்கையில் இனக்கலவரம் வெடிக்கும் வரை வெளிநாட்டுக் கனவுகள் இவர்களுக்கு இருந்ததில்லை.
வேறு ஊர்களில் போய்வாழ மனம் விரும்பாத மக்களை ஒரு பேரதிர்ச்சி தாக்கியது. ஆமைதி விரும்பும் எம்மூர் மக்களை இலங்கை இராணுவம் 1987 இல் ஒரு முறை விரட்டியடித்து ஒத்திகை பார்த்தது. மீண்டும் ஒரேஅடியாக 90ம் ஆண்டில் விரட்டியடித்துஇடம்பெயர வைத்தது. ஏனென்று கேட்க நாதியற்றவர்களாக கையில் பட்டதையெல்லாம் அள்ளிக்கொண்டுஅகதிகளாக அயல் கிராமங்களில் தஞ்சம் புகுந்தார்கள். இன்று வரை பிறந்த மண்ணை மிதிக்காமல் பிற நாட்டிலேயேயும்இ பிறந்த நாட்டிலேயும் அகதிகளாக வாழும் அவல நிலைதான் அறுதியான முடிவாக அமைந்தது. அரசியல் வாதிகளோஇ அந்தோனியாரோ அற்புதங்கள் செய்து ஆறுதல் அளிப்பார்கள்இ என இன்னமும் எம்மூர் மக்கள் நம்பிக்கையோடு நம் கிராமத்தில் மீண்டும் கால் பதிக்கும் கனவுகளோடு வாழ்ந்துவருகிறார்கள். ஒரு நாள் விடியும் இருளும் முடியும்இ உதயம் தெரியும் பொழுதிலே அந்த திருநாள் இங்கு வரும் போதினிலே வருவோம்இ வருவோம் மகிழ்விலே. (நன்றி ஈழம் வெப்)

எமது கிராமம்
பாதுகாப்பு வேலி (வரைபடம் பார்க்க) என இலங்கை அரசாங்கத்தால் பூகோளரீதியில் அடைக்கப்பட்ட ஊறணிக்கிராமம் இன்று உயிரோடு வாழ்கிறது. பலாலி இராணுவத்தளத்திற்கும்இ காங்கேசன்துறை துறைமுகத்திற்கும் போக்குவரத்து வினியோக பாதையாக பருத்தித்துறை வீதி பயன்படுவதனால் எங்கள் கிராமத்தை முற்றும் அழிக்காமல் விட்டு வைத்திருக்கிறார்கள். ஆனால் கடற்கரையோரமெல்லாம் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளன. கல்வீடுகளில் கூரை ஓடுகள்இ மரத்தளபாடங்கள் எதுவும் இல்லை. எல்லா வளவுகளிலும் கள்ளிச் செடிப் பற்றகை;காடுகள். புதிய ஆலையத்தில் உள்ள திருச்சொரூபங்கள் எல்லாம் துணியால் சுற்றப்பட்டு ஒரு மூலையில் உறங்கிக்கிடக்கின்றன. பாடசாலை மண்டபம் இராணுவத்தினருக்கு உணவு சமைக்கும் இடாக மாறியுள்ளது. இரண்டு ஒரு வீடுகளும் விமானக் குண்டுவீச்சால் அழிந்துள்ளது. சமீபத்தில் எங்கள் ஊர் சேமக்காலையை பழைய பாடசாலை ஆசிரியையாக கடமையாற்றி இறந்த தையலம்மாவின் பிள்ளைகள் தரிசித்ததாக கேள்வி. ஏங்கள் ஊரை முற்றாக அழித்து சிங்களவரை குடியேற்றி அதற்குப் புதிய நாமம் சூட்டவும் திட்டங்களும் வரைபடங்களும் சில வருடங்களுக்கு முன்னர் இராணுவம் தயாரித்து வைத்திருந்ததாக கேள்வி. ஏவ்வாறாகிலும் பாதுகாப்பு வேலியை உடைத்த. பதுக்கி வைத்திருக்கும் மிதிவெடிகளை மீட்டால் அன்றி எங்கள் கிராமத்தில் மீள குடியேற்றம் நடைபெறவாய்ப்பில்லை.
மேலும் யாம் செல்லும் வெளிநாட்டு நம்மூர் உறவுகள் எங்கள் கிராமத்தை எட்டிப் பார்க்க முடியாத தூரத்தில் தான் நிற்கவேண்டிய நிலை. மனித நடமாட்டம் இன்றி பற்றைக் காடாய் மாறியிருக்கும் எங்கள் ஊர் கண்ணீர் வடித்து என்பிறப்புக்களே எப்போது என்னை மீட்க வருகிறீர்கள் என தினமும் காத்து நிற்கிறது.
ஞானசீலன்

புலம்பெயர்ந்து வாழும் ஊறணி மக்களைப் பற்றி
சுமார் நூற்றி முப்பது குடும்பங்கள்தான் 1990 ம் ஆண்டில் நடந்த இடம்பெயர்வுக்கு முன்னர் ஊறணிக்கிராமத்தில் வாழ்ந்தார்கள். இவர்களில் கிட்டத்தட்;ட 70 விழுக்காடு வெளிநாடுகளில் வாழ்கிறார்கள். மிகுதி 30 விழுக்காடு யாழ் மாவட்டம்இ வன்னிஇ மன்னார்இ கிளிநொச்சிஇ மல்லைத்தீவு மாவட்டங்களிலும் வாழ்கிறார்கள். கொழும்புஇ மட்டக்களப்புஇ திருக்கோணமலையிலும் இரண்டு மூன்று குடும்பங்கள் வாழ்கிறார்கள். வெளிநாடுகிளல் அரசியல் தஞ்சம் கிடைக்கப்பெற்றவர்களின் விபரங்கள் இன்னும் சரிவர அறியமுடியவில்லை. ஐக்கிய இராச்சியத்திலும் (ருமு) ஐரோப்பவிலும் (குசயnஉந. ர்ழடடயனெஇ புநசஅயலெஇ ழேசறயலஇ னுநnஅயசமஇ ஐவயடல) ஐக்கிய அமெரிக்காவிலும் கனடாவிலும்இ அவுஸ்ரேலியாவிலும் ஊறணி மக்கள் பரவி வாழ்கிறார்கள். சொந்த நாட்டில் இடம்பெயர்ந்து வாழ்பவர்கள் பலருக்கு சொந்த உறவுகள் வெளிநாட்டில் இல்லை. வெளிநாட்டில் வாழும் சிலருக்கு சொந்த உறவுகள் பிறந்த நாட்டில் இல்லை. ஆனாலும் இந்த இணைத்தளம் ஊடாக எல்லோருடைய வாழ்விடங்கள் பற்றி பூரணமான தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.

ஞானசீலன் அந்தோனிமுத்து 27.04.2004

About ratna

5 comments

  1. Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you. https://accounts.binance.com/fr/register-person?ref=DB40ITMB

  2. Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?

  3. buy ivermectin usa – ivermectin over counter order carbamazepine 200mg pills

  4. accutane cheap – buy generic accutane zyvox order online

  5. buy cheap amoxil – purchase valsartan pills buy combivent pill

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

slot anti rungkat 2023>BEJOBET: Situs Slot Online Gacor Anti Rungkat Terbaru 2023 slot anti rungkat 2023>MPOSUN: Link Situs Judi Online Slot Gacor Terbaru slot gacor >BEJOBET: Situs Judi Online Slot Gacor Terbaik Di Indonesia slot gacor 2023 > daftar situs slot gacor 2023 terpercaya nomor 1 Di Indonesia Gampang Menang