உறவுகளே, நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை ஊறணியில் நடைபெறுகின்ற ஒன்றுகூடலில் தவறாது பங்கு கொண்டு வீட்டுத் திட்டத்தைப் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபடுங்கள்.ஒற்றுமையே பலமாகும்.அரிய இச்சந்தர்ப்பத்தைத் தவற விடாதீர்கள். விபரத்தை எவரிடமும் கொடுத்து விடலாமென்றும் பிறிதொரு நாள் விபரத்தைத் தரலாமென்றும் எண்ணாதீர்கள். அவசரம்-அத்தியாவசியம் என்பதை உணருவோம். குடும்பத் தலைவர்கள் உட்பட்ட அங்கத்தவர்கள் வருகை தாருங்கள்.
பலதரப்பட்ட விடயங்கள் பற்றி ஆலோசிக்கவுள்ளோம். ஊறணியின் ஒவ்வொரு குடிமகனதும் வருகை உங்களதும் உங்கள் குடும்பத்தினதும், ஊரினதும் அபிவிருத்தியை மேம்பட வைக்கும் என்பதைப் புரிந்து செயற்படுவோம்.
நல்லதோர் எதிர் காலத்திற்காய் இந்த 25 இல் ஒன்று கூடுவோம்.