அமரர்கள் நேசமுத்து, நேச ராணி, நேசதீபன் நினைவாக இவர்களின் குடும்பத்தவர்களால் இன்றைய தினம் (07.08.2018 )ஊறணியின் எதிர்காலத் தலைவர்களான ஆரம்பக் கல்வி (நேசறி) மாணவர்கள் தொடக்கம் A/L வரையான மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 4.30 மணிக்கு நினைவுத் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு திருப்பலி முடிவில் எம் பங்குத்தந்தை அவர்களால் ஊறணியின் மாணவச் செல்வங்களுக்கு இப்பரிசுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இன்றைய தினம் 34 மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்ட போதும் மேலும் இருபதிற்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவு செய்திருக்கின்றார்கள்.
இந்நிகழ்வினூடாக 54 ற்கு மேற்பட்ட ஊறணியின் மாணவச் செல்வங்கள் பதிவு செய்தமையானது இதுவே முதன் முறையாகும். இவ்வளவு பெருந்தொகையான மாணவச் செல்வங்கள் இருக்கின்றார்களா என்ற பிரமிப்பை இந்நிகழ்வு ஏற்படுத்தியிருக்கின்றது.
இந்நிகழ்வை ஒழுங்கு செய்து பாடசாலை உபகரணங்களை வழங்கிய குடும்பத்தினருக்கு மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.