அன்று நடைபெறும் விருந்து. முன்பு ஊறணியில் கொடியேற்றம் அன்று மட்டுமே விருந்து அவித்து பரிமாறி மகிழ்வுறுவது வழமையாகவிருந்தது. ஆனால் போன வருடத்தில் திருநாள் அன்று மதிய போசனம் கொடுப்பதாக திருமதி டானியேல் சாந்தா அவர்களும் ஜெகன் குடும்பத்தினரும் ( டண்டன்) இணைந்து அறிவித்து கோழி இறைச்சியுடன் சாப்பாடு கொடுத்து மகிழ்ந்தார்கள்.
இந்த வருடம் ஒரு படி மேலே போய் கிட்டத்தட்ட 600 பேருக்கு மேற்பட்டவர்களுக்கு ஜெகன் குடும்பத்தினர் ஃபிறைட் றைஸ் கொடுத்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
ஊறணி Rds கட்டடத்தில் 3 பேர்களை வேலைக்கு அமர்த்தி தாமே சமைத்து இன் சுவையான அந்த உணவை வழங்கியிருந்தார்கள்.
உணவு பரிமாறும் போது ஆலய இளைஞர்கள் ஒன்று சேர்ந்து கலியாண வீட்டில் உணவு பரிமாறியது போல – நேர்த்தியாக சாப்பாட்டுத் தட்டுக்களில் அழகாகப் பரிமாறினார்கள்.நாவினிக்க – பசியாறிச் சென்றனர் ஆலயத்திற்கு வந்திருந்த பக்தர்கள்.
நீண்ட தூரத்தில் இருப்பவர்களும் ” ஊறணியில் கோழிச் சாப்பாடாம்” என்று சொல்லும் அளவுக்கு இச்செய்தி பரவியிருந்தது.
ஜெகன் குடும்பத்தினருக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு மேலும் தொழில் துறைகள் விருத்தியடைந்து ஊறணிக்கும், ஆலயத்திற்கும் தம்மாலான உதவிகள் புரிய தேவையான அருள்வரங்களை இறைவன் பொழிந்திட வேண்டுமென்று கோடியற்புதரின் மூலமாக மன்றாடுகின்றோம்.