ஊறணி சேமக்காலையை மறுசீரமைப்பது பற்றியி ஒரு அபிவிரித்திட்டம் எமது லண்டன ஊறணியார் நிர்வாகத்தினரால் முன்னெடுப்பதுபற்றிய ஒரு அறிவித்தலை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்
இத்திட்டம் ஊறணிமக்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் மட்டுமே முன்னெடுக்கப்படும்.
சேமக்காலை மறுசீரமைப்பு தொடர்பான வரைபு மற்றும் செலவு என்பன லண்டன் ஊறணியாரால் பொறுப்பேற்கப்படும்.
மறுசீரமைப்பு வரைபு தொடர்பான ஆலோசனைகள் கேட்கப்பட்டு பரிசீலனை செய்யப்படும். அதேபோல எமது வரைபும் இத்தளத்தில் பதியப்பட்டு ஆலோசனைக்கு உட்படுத்தப்படும்.
இங்கே மறுசீரமைப்பு என்று குறிப்பிடப்படுவது சேமக்காலையானது ஒரு புதிய வடிவத்தில் மாற்றமடையும் அதன்பொருட்டு தற்போது நடைமுறையிலிருக்கும் சேமக்காலையானது முற்றாக அழிக்கப்பட்டு புதிதாக வடிவமைக்கப்படும் இதன் பொருட்டு ஏற்கனவே கட்டப்பட்டிருக்கின்ற கல்லறைகள் அகற்றப்படவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் . இதற்கு ஊறணியின் பெரும்பான்மையானவர்கள் அனுமதித்தால் மட்டுமே மறுசீரமைப்பு பணி முன்னெடுக்கப்படும் அனுமதிக்காத பட்சத்தில் நாங்கள் இத்திட்டத்திலிருந்து விலகிக்கோள்வோம்.
ஊறணி மீள் குடிமாற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்து அதன் பின்பு இறந்த எமது உறவுகளிற்கு மட்டுமே சிலுவைக்கல் வைக்க அனுமத்க்கப்படும்.
சேமக்காலை மறுசீரமைப்பு செலவுகளை லண்டன் ஊறணியார் பொறுப்பேற்கும் அதேவேளை சேமக்காலை மறுசீரமைப்பின் பின் எமது திட்டத்தின் ஒருபகுதியான வருமானம் பெறுதல் என்கின்ற திட்டத்தில் பெறப்படும் பணமானது நாம் செலவிட்ட பணத்தை மீளப்பெறுவது என்கின்ற திட்டத்தில் நாம் செலவு செய்த பணத்தொகையின் சில பகுதிகளையாவது திரும்ப பெற்றுக்கொள்வோம்.
திட்டத்தில் வருமானம் வரும் என்று குறிப்பிட்ட அந்த திட்டம் பின்பு இந்தத்தளத்தில் அறியத்தரப்படும்.
சேமக்காலைக்கு கிடைக்கும் வருவாய் அல்லது உதவிப்பணமானது சேமக்காலைப் பராமரிப்புக்கு மட்டுமே செலவுசெய்யப்படும்.
இத்திட்டமானது கடன் வழங்கல் முதலீட்டுத்திட்டமாகும். இத்திட்டத்தில் நாம் கடனாக செலவுசெய்த பணத்தை வருவாயாக திரும்ப பெற்றுக்கொண்டால் அதன் பின் மேலும் பல திட்டங்களை செய்வதுபற்றி எமது லண்டன் நிர்வாகம் கலந்தாலோசிக்கும்
இப்படிக்கு
லண்டன் நிர்வாகம்