அண்மையில் கடற்றொழில் – நீரியல் வள அமைச்சரைச் சந்தித்து எமது ஊரின் அபிவிருத்தி தொடர்பாய் எமது கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம்
கடற்கரையைப் பாதுகாக்க அணைக்கட்டு, வீட்டுத் திட்டம். வாழ்வாதாரம் போன்ற விடயங்களைத் தனித்தனியே முன்வைத்தோம்.
அவரும் எல்லாம் செய்து தருவதாகச் சொல்லியிருக்கிறார். ஆனால் அடிமேல் அடியடிச்சாத்தான் இந்த அரச இயந்திரம் நகரும்.
தனது யாழ் மாவட்ட இணைப்பாளரை ஊறணிக்கு அனுப்பி முதலில் பார்வையிடுகிறேனென்றும் கூறியிருந்தார்.அமைச்சரையும் ஊறணிக்கு அழைத்திருக்கிறோம்.
அமைச்சரின் இணைப்பாளரை இன்று மறுபடியும் தொடர்பு கொண்டிருக்கிறேன். நாளை வருவது தொடர்பாக கூறுகிறேன் என்று சொல்லியிருக்கிறார்.
பார்க்கலாம். கடற்றொழில் சார்ந்த பிரச்சினை என்பதால் அமைச்சுக்கு பொறுப்பிருக்கிறது. செய்துதான் தர வேண்டும்.
ஆயினும் எமது பக்கமான குறைபாடுகளை நாம் கவனிப்போம்.-sj-viber 27.02.21