Home / அந்தோனியார் ஆலயம் / தொடரும் ஆக்கிரமிப்பின் மத்தியில் நம் பூர்வீகத்தைக் கட்டிக் காப்போம்

தொடரும் ஆக்கிரமிப்பின் மத்தியில் நம் பூர்வீகத்தைக் கட்டிக் காப்போம்

அன்புறவுகளே, புனித அந்தோனியார் பக்தர்களே! தங்களை நாம் நாடி வருவதற்கு காரணங்கள் உள்ளன. உரிமையும் உண்டு. 2013 ஆம் ஆண்டிற்கு முன்னர் காங்கேசன்துறை ஊறணி என்னும் புனித பூமியில் அழகாக வானளாவ வீற்றிருந்த புனித அந்தோனியார் ஆலயம் முற்றாக இடித்தொழிக்கப்பட்ட வரலாறு எமது நெஞ்சங்களை பிளந்த ஓர் மறக்க முடியாத கரிய இருள் சூழ்ந்த கொடிய சம்பவமாகிவிட்டது.
சுண்ணாம்புக் கற்களாலான நீண்டகால பழமை வாய்ந்த கோவிலை 1980 ஆம் ஆண்டளவில் மாற்றியமைக்கப்பட வேண்டிய தேவை ஏற்பட்டபோது புதியதை கட்டிமுடிக்க ஊரே துள்ளி எழுந்தது. சிறுவர், பெண்கள் முதல் முதியோர் வரை கல் சுமந்து, மண் சுமந்து ஒன்று கூடி கோவிலையும் கட்டுக்கோப்பான நம் சமுதாயத்தையும் கைகோர்த்து இனிதே கட்டியெழுப்பிப் பெருமைப் பட்டோம்.
இனமத வேறுபாடின்றி நாற்றிசையிலுமிருந்து பக்தர்கள் கூடிப் புனிதனைக் கொண்டாடி மகிழ்ந்து ஏற்றமிகு சமுதாயமாக மலர இத்தலம் களம் அமைத்தது. பசுமையான நினைவுகள் இவை.
இவ்வாலயத்திற்கு ஊறணி மக்கள் மட்டுமல்ல அயல் கிராமங்கள், தூர இடத்துப் பக்தர்கள், ஏன் கடல் கடந்தும்கூட ஓடோடி வந்து புனித அந்தோனியாரிடம் வரம் வேண்டியவர்கள் ஏராளம். தேடி வந்தவர்களை ஆற்றுப்படுத்தும் தலமாக இவ் ஆலயம் பிரசித்திபெற்று விளங்கியது. நாம் சார்ந்த வலிவடக்கு முழுவதையும் 1990 இல் இராணுவத்தினர் தமது முழுக்கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார்கள். தவிர்க்கமுடியாமல் இடம்பெயர்ந்து அலைந்தாலும் புலம்பெயர்ந்து எட்டப்போனாலும், வாரங்கள், மாதங்களாகி, மாதங்கள் ஆண்டுகளானாலும் “மீண்டு(ம்) உம் பாதம் வருவோம்” என்ற புனித அந்தோனியார் மேல் வைத்த அளவற்ற நம்பிக்கை நம்மை விட்டு நீங்கியதேயில்லை. அன்றிலிருந்து 2016 கார்த்திகை மீளக் குடியேற்றம் தொடங்கும் வரை ஒரு ஈ, காக்கை கூட இப்பிரதேசத்திற்குள் இராணுவத்தினரின் அனுமதி இன்றி நுழைய முடியாது. எனினும் 2009 யுத்தம் முடிவடைந்த பின்னர் 2012 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இடையிடையே இராணுவத்தினரின் அனுமதியுடன் மக்களற்ற இந்த ஆலயத்திற்கு புனிதரின் திருநாளைக் கொண்டாடுவதற்கு மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையில் போய் வந்தோம் .
ஆனால் ஐயகோ! 2016 இல் இப்பிரதேசத்திற்கு ஒருபகுதி மீளக்குடியேற வந்த எமது தலைகளில் இடி இறங்கியது. எமது வீடுகள், சொத்துக்களை அழித்ததைக் கூட பெரிதாக நினைக்கத் தோன்றவில்லை எமது நம்பிக்கையின் இருப்பிடமும் எமது கிராமத்து அடையாளமுமாக விளங்கிய ஊறணி புனித அந்தோனியார் ஆலயம் தரையோடு தரையாகி இடித்தழிக்கப்பட்டதைக் கண்டு நம்பவே முடியாதவர்களாய் கண்களை பொத்திக்கொண்டு கதறிக் கதறி அழுது நொந்தோம். கோவிலற்ற அநாதைகளாகி எமது ஆறாத் துயரை ஊறணிக் கடலிலே கரைத்தோம்.
இனி எமக்கு வாழ்வேது…? வழியேது…? என ஏங்கித் தவித்தாலும் கோடி அற்புதர் கைவிடமாட்டார் என்று எங்களை நாமே தேற்றிக் கொண்டிருந்த வேளையில் இடித்தழிக்கப்பட்ட அந்த ஆலயத்தை கட்டியெழுப்ப முன்னின்று செயல்படுத்திய அதே முன்னாள் பங்குத்தந்தை அருட்திரு T. தேவராஜன் அடிகளார் மீண்டும் எமது பங்கிற்கு பங்குத்தந்தையாக வந்ததையிட்டு ஆறுதல் அடைந்தோம். புத்துயிர் பெற்றோம்.
மூலைக்கு மூலை அரச மரங்கள் நிற்கும் ஒரே காரணத்தால் அவ்விடங்களெல்லாம் விகாரைகள் நாட்டப்படும்போது, ஏன் எமது நம்பிக்கையின் நாயகன் புனித அந்தோனியாருக்கு மீளவும் ஓர் ஆலயம் கட்டக்கூடாது? என்ற வைராக்கியத்துடன் எமது பங்குத்தந்தையின் தலைமையில் கூடி தீர்மானம் எடுத்தோம். புனித அந்தோனியாரின் கோவிலை மீளக் கட்டுவது ஊரின் அடையாளத்தையும், எமது பூர்வீகத்தையும் பேணிப் பாதுகாக்க அவசியமானது என்பதை உணர்ந்து செயலில் இறங்கினோம். இவ் ஆலயம் மீளவும் 1980 களில் ஊர் மக்களின் கடும் உடல் உழைப்பினால் உருவாக்கப்பட்டு 2012 இல் அரச இயந்திரத்தினால் இடித்தழிக்கப்பட்ட ஆலயத்தின் அதே அடித்தளத்தை அடிப்படையாகக்கொண்டும் எமது ஊரின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் வித்திட்ட முதலாவது ஆலயத்தின் முகப்புத் தோற்றத்தினை தழுவியதாகவும் காலத்துக்கேற்ற மாற்றங்களுடன் ஊரையும் நம் பூர்வீகத்தையும் நேசிக்கும் உறவுகளின் பங்களிப்புடன் இவ் ஆலய கட்டுமானப் பணிகளானது இன்றை வரைக்கும் முடிவுறாத நிலையில் இடம்பெற்றுக்கொண்டிருப்பதை கீழே தரப்படும் படங்களில் காணலாம்.
எமது இந்த முயற்சியினால் தூண்டப்பட்டு “நாங்களும் எங்கள் பங்களிப்பை நல்கவேண்டும்” என்று யாசிப்பவர்களை அன்போடு அழைக்கின்றோம். இதுவே தகுந்த சந்தர்ப்பம். கோவில் கட்டுமானப் பணியை சிறப்புடன் நிறைவுசெய்ய உரிமையுடனான உங்கள் பங்களிப்பை நாடி நிற்கின்றோம்.
தங்கள் நிதி அன்பளிப்பை கீழே உள்ள வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைக்குமாறு பணிவன்புடன் கேட்டு நிற்கின்றோம். உங்கள் பங்களிப்பு, இப்பகுதியில் இன்றும் தொடரும் ஆக்கிரமிப்பின் மத்தியில் நம் பூர்வீகத்தைக் கட்டிக் காக்க வழிகோலும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
வங்கி கணக்கு விபரம் : –
Urany St.Antony’s Church Building Fund 8005393899
Commercial Bank, Chunnakam Branch
தாங்கள் நிதியினை அனுப்பி வைத்ததற்கான ரசீதினை ஊறணி புனித அந்தோனியார் முகப்புத்தகத்தின் Inbox இற்கு அனுப்பி வையுங்கள். அல்லது நேரடியாகவே வர விரும்புபவர்கள் காங்கேசன்துறை ஊறணி புனித அந்தோனியார் ஆலயத்திற்கு வருகை தந்து எமது பங்குத்தந்தை அருட்திரு T. தேவராஜன் அடிகளாரிடம் தொடர்பு கொள்ளுமாறு கேட்டு நிற்கின்றோம். எப்பொழுதும் தங்களுக்காக புனித அந்தோனியாரின் பரிந்துரைகளுடன் இறை இயேசுவின் இறையாசீரை இரந்து நிற்கின்றோம்.
இங்கனம்
ஆலய அருட்பணிச் சபை
ஊறணி புனித அந்தோனியார் ஆலயம்.

About ratna

slot anti rungkat 2023>BEJOBET: Situs Slot Online Gacor Anti Rungkat Terbaru 2023 slot anti rungkat 2023>MPOSUN: Link Situs Judi Online Slot Gacor Terbaru slot gacor >BEJOBET: Situs Judi Online Slot Gacor Terbaik Di Indonesia slot gacor 2023 > daftar situs slot gacor 2023 terpercaya nomor 1 Di Indonesia Gampang Menang