இன்றைய பொழுது கியூடெக் இயக்குநர் அடுட்திரு.யூஜின் அடிகளாரை நானும்
திரு யோகராசா அண்ணாவும் ஊறணி பங்கு மக்கள் சார்பில் சந்தித்தோம். தற்காலிக ஆலயம், பொது மண்டபம், முன்பள்ளி மற்றும் நூலகம் தொடர்பான விடயங்களை முன்வைத்தோம். எனினும் இயக்குநர் அவர்கள் இவ்விடயங்கள் சார்பாக பிடி கொடுக்காமலேயே கருத்துப் பரிமாறலை முன்வைத்தார்.எனினும் ஒரு விடயம் கூறினார்- அதாவது நமது ஆயர் அவர்கள் ஆலயத்தைக் கட்டித் தருவதற்கு ஒழுங்குகள் செய்வார் தானே என்றார். இதற்கு நாம் – ஆயருடன் நாம் உரையாடும் போது இவ்வாறான உறுதி மொழிகள் எதையும் அவர் வழங்கவில்லையே என்றோம். Fr சிரித்தவாறே – ஆயர் தனது கடமையைச் செய்வார் தானே என்று உரையாடலை நிறுத்திக் கொண்டார்.
எமது கோரிக்கைக்கடிதத்தைக் கையளித்துவிட்டு கியூடெக்கிலிருந்து வெளியே வந்தோம். ஏதோ ஒரு வெறுமை. உடனடியாக திரு புஸ்பராசா அண்ணாவுடன் தொடர்பு கொண்டோம். அவர் தனது ஸ்ரையிலில் நாமே நமது தற்காலிக ஆலயத்திற்கான கொட்டகையை போடுவோம் என்றார். அப்படியே எமது ஊர் மைந்தன் அருட்திரு.நேசராஜா அடிகளாரைச் சந்தித்தோம் – அவர் பொறுத்திருங்கள் நான் ஆயர் மற்றும் கியூடெக் இயக்குநரைச் சந்தித்து இவ்விடயங்களை ஆராய்கிறேன். இவர்கள் இணைந்து திட்டம் ஏதாவது வைத்திருக்கலாம் என்றார்.
எமது சந்திப்புக்கள் வெற்றியா? தோல்வியா? புரியாமலேயே வீடு வந்தோம்.எம் உறவுகள் அனைவருக்கும் இதைத் தெரியப்படுத்துகின்றோம். நிச்சயமாக -கருத்துக்களைத் தயங்காமல் பதிவிடவும்.
மேலதிக விபரங்களை uraniyaar என்ற facebook group இற்குள் வந்து ஊரவர்கள் இணைந்தால் பார்வையிடலாம்.