இந்தவருடம் 2014 ஆம் ஆண்டு நோர்வே,டென்மார்க்,சுவிற்சர்லாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் வாழும் ஊறணி உறவுகள் யேர்மன் வாழ்
உறவுகளுடன் இணைந்து யேர்மனியில் ஒன்றுகூடலை நடாத்துவதாக, கடந்த வருடம் லண்டன் ஒன்றுகூடலில் முடிவு செய்யப்பட்டது, நீங்கள் எல்லோரும் அறிந்ததே.
கடந்தவாரம்(09.02.2014)அன்று யேர்மனியில் ஒன்றுகூடல் நடாத்துவது சம்பந்தமான கலந்துரையாடலில் ஒன்றுகூடல் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகள்.
1.19-20.ஜூலை.2014 சனி ஞாயிறு இருதினங்கள் ஜேர்மனியில் கேவிலார் எனும் இடத்தில் நடாத்துவது.
2.சனி பிற்பகல் 3 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பித்து ஞாயிறு மதியத்துடன் முடிவடையும்.
3.வருகைக்கான பதிவுகளை மார்ச் 10 இற்கு முன்பு நிறைவு செய்தல்.
4.வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தங்குவதற்கு கேவிலாரில் hotel இலில் ஏற்பாடு செய்து கொடுக்கப்படும். அதற்கான கட்டணமாக ஒரு குடும்பத்திற்கு ஓர் இரவு தங்குவதற்கு 25-30 Euro தாங்களே செலுத்தி தங்க வேண்டும். இதற்கான முன்பதிவு விரைவில் செய்யவேண்டி இருப்பதால் உங்கள் வருகையை விரைவில் உறுதி செய்யுமாறு வேண்டுகிறோம். தனி நபர்களாக வருபவர்களுக்கு ஊறணி உறவுகளின் நண்பர்களின் குடும்பங்களோடோ அல்லது பொதுவான மண்டபம் ஒன்றோ ஒழுங்கு செய்து தரப்படும். இந்த யோசனை தனி நபர்களாக வருபவர்களின் எண்ணிக்கையை பொறுத்து பரீசீலிக்கப்படும்.
தனி ஒரு நாட்டில் இல்லாமல் பல நாடுகளிலும் வாழும் எம்மூரவர்கள் ஓர் இடத்தில் ஒன்று கூடுவதென்பது எமக்கும் பெருமை எம்மூரவர்க்கும் பெருமை என்பதை மனதில் நிறுத்தி இவ் ஒன்று கூடல் சிறப்புற நாம் அனைவரும் கைகோர்ப்போம்.
மேலதிக விபரங்களை அறியவிரும்பின் தொடர்புகளுக்கு:
நோர்வே :
டென்மார்க் : :
ஹொல்லண்ட் :
சுவிற்சர்லாந்து :
ஜெர்மனி :எமிலியானுஸ் (பட்டு)-0049-2152559492/0915150400972
தாசன்: 00-492272978271/01722995959
புஸ்ப்பாகரன் :0049-25743280870/015233565114
இளையவர்களுக்கு :Bensia, Babista, Arthy
தகவல் :
டொன் பொஸ்கோ ஞானசெல்வம் 0049-421429446/15201821753
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.