எமது ஊர்மக்களின் முதலாவது ஒன்றுகூடல் லண்டனில் ஞாயிறு மதியம் 1 மணிக்கு வண. பிதா. தேவராயன் அடீகளார் அவர்களின்; திருப்பலியுடன் ஆரம்பமாகி,; பாடல்கள் வாத்திய இசையுடன்; எமது மக்களின் பங்களிப்புடன் சிறப்புற்றது. அதன்பின்பு சிறிய மதிய போசனவிருந்து பரிமாறப்பட்டது, எல்லோரும் தாங்களாகவே ஒவ்வொரு உணவாக தயாரித்து தங்களுக்கிடையில் பகிர்ந்து கொண்டனர். அதன்பின்பு சங்கீதக்கதிரையும் இடம்பெற்றது. எமது ஊரை மீண்டும் ஞாபகமுட்டும் செய்திகள் பரிமாறப்பட்டது. ஒவ்வொருவரும் தங்களுக்கிடையில் கடந்தகாலங்களை நினைவுபடுத்தியது ஒன்றுகூடலின் தேவையை அவசியமாக்கியது. இறுதியாக எமது மக்களின் வாழ்வுக்காக நிதி சேகாpக்கப்பட்டது.
27.04.2003