ஊற்று நீர்களை
கனிமங்களோடு
நீலக் கடலுக்கு ஈய்ந்தாள்
அதில் ஒன்று ஊற்றலடி
ஊற்றலடி
ஊற்றுத் தண்ணீர் − கடல்
உயிர்களுக்கு
ஊட்டத்தண்ணீர்
உவர்ப்பற்ற ஊற்றுநீர்
பாறை கல் தொட்டதால்
பாசிகள் வளர்ந்தன
பாசிகள் கண்டு
பார்மீன் வரலாயின
ஒட்டி ஓரா உறை கலவாயும்
நீரில் மேல் நீந்தும்
மணலை வெருகா
மண்டைப்பாக்கன்
துள்ளிப் பாயும்
வெள்ளியா மீனும்
சுற்றுலா போல் வந்து − பாசிகள்
சுவைத்து மகிழ்ந்தன
வண்டல் கனிமம்
சுவைக்க வளையவந்த
கிளாக்கன் எருமைநாக்கி
குளிக்க வந்தோர்க்கு
குதுகலமூட்டின
மீன்களின் வரவு கண்டு
வீசும் வலையோர்
வேட்டைக்கு
ஆயத்தமாகினர்
கடலைக் கலக்கும்
சிறுவரை
கலைத்து விரட்டினர்
காற்சட்டை கழர − சிறுசுகள்
ஓட்டம் பிடித்தனர்
வீசுவோர்
கூர்மைப் பார்வையும்
குண்டு ஈய வலையுமாய்
குவித்துப் பாதம் தூக்கி
அடிமேல் அடிவைத்து
மீன்கள் அருகே நெருங்க
வரலாம்…
Real excellent information can be found on weblog.Expand blog
Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?