சுழலும் பூமிப்பந்தில்
வாழ்கைச்
சுழிகளால் வந்தவலிகளில்
அழுத நேரமெலாம் எமக்கு
ஆறுதலும்
அரவணைப்பும் தந்த
ஆன்மிக ஆலமரம்
ஆடி- நீர் வடிய
அதிர்ந்து நிற்கிறது
கோடிதுன்பம் அவரைச்
சூழவந்தாலும்
என்றும் எங்கும் காட்டாது
நாடி வரும் நபர்களிற்கு
நாளும் பணிசெய்யும்
நல்ல யேசுமகன்
எம் அருள்தந்தை
ஓடி அருகே துயர்பகிரென
உள்ளம் துளைத் தாலும்
பிரிந்த அவர் உடன்பிறப்பை
பார்க்க பாழ்மனசு துடித் தாலும்
வாழும் நாட்டு
வாழ்கைச் சிறைவிட்டு
வரும் வழியறியாது
வான்நோக்கும் மனிதர்களாய்
வாடி நாம் நிற்கின்றோம்
பார்செய்த மோசமோ – இல்லை
போர் செய்த கோலமோ
ஊர் அயலில் வாழ்ந்த
உத்தமர் இறிதி ஊர்வலத்தில்கூட
ஏட்டிப்பார்க
இயலா மனிதராய்
விக்கிவிம்முகின்றோம்
நாம் போற்றி ஏற்றும்
புகழ் மிகு நாதரே
அருள் தந்தை
அவர் உறவுகளை
தேற்றி ஏற்றி
திரும்பவும் மகிழ்வாழ்விற்குள்
பயணிக்க வரமருள்வாய்
/ஊரவன்
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good. https://www.binance.info/en/join?ref=IJFGOAID