என் அன்பின் புலம்பெயர் உறணிவாழ் உறவுகளுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் சொல்லும் வரைவு .
புலம்பெயெர்ந்த உறணி உறவுகளால் இந்தவருடம் நடாத்தப்பட்ட ஒன்றுகூடல் என்னைபொறுத்தவரையில் எங்களுக்கு பல நிறைவுகளை பெற்றுத்தந்திருக்கிறது பலவருடகலமாக காணாதவர்களை கண்டு மகிழ்ந்து கொண்டாடி இருக்கிறோம்.
அருகே இருந்தும் தொலைபேசி தொடர்புகூட இல்லாமல் இருந்தோம் ,இப்போ அது மாற்றம்மடைந்து எல்லோருடனும் தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.இவைகளை விட நமது பிள்ளைகள் இவர் யார் அவர் யார் என்ற கேள்விக்கே இடமில்லாது கூட்டாகச் சேர்ந்து மகிழ்ந்து ,ஊர் சம்பந்தமான விடையங்களை தெரிந்து கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு பிள்ளைகளிடமும் என்ன திறமை இருக்கிறது என்று தெரிந்துகொள்ள இப்படியான ஒன்றுகூடல் ஒவ்வொரு ஆண்டும் தேவையென்பதை உணர்த்தியுள்ளது. நமது உறவுகளின் திறமை அன்பை பகிர்கின்றவிதம் ,அவர்களின் உதவுகின்ற மனப்பான்மை அடுத்தவர்களை நோகடிக்காமல் பேசுகின்ற விதம், இவை எல்லாவற்றையும் கண்டு பிரமித்து போனேன்.
குறிப்பாக பெனடிக்ரா செல்வத்திடம் இவ்வளவு திறமையும் கெட்டித்தனமும் இருப்பது என்பது நான் அறிந்து கொண்டது இதுவே முதல் தடைவையாகும். எங்களுக்கு ஒரு மந்திரியாக நின்று எங்களை நெறிப்படுத்திக்கொண்டு முக்கியமான பொறுப்புகளை மிகவும் பொறுமையுடன் செய்து முடித்திருந்தார். ஒன்றுகூடலில் நன்றி உரையையும் அவரே வழங்கியிருந்ததால் எம்மால் அவவுக்கு நன்றி சொல்வதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை ஆதலால் அவவுக்கு இவ்விடத்தில் நான் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
செல்வம் ,புஷ்பாகரன் குடும்பம் ,பட்டுகுடும்பம் இவர்களும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதை கண்கூடாக கண்டேன் அவர்களுக்கும் என் நன்றிகளை கூறிக்கொள்கிறேன் .திரவியம் தனது பெயருக்கு ஏற்றாற்போல் அன்பையும் உதவிகளையும் சலிக்காமல் அள்ளி அள்ளி செய்தததையும் நான் மறக்கவில்லை,அவருக்கும் எனது ஓஹோ நன்றிகள்.
பாரிசிலிருந்து குடும்பமாக வந்திருந்த மும்மூர்த்திகளான தோமா ,அருள்தாஸ் ,வின்சென் எங்களது வேலைப்பளுக்களை குறைப்பதில் பங்கெடுத்து ஒரு கலக்கு கலக்கி இருந்தார்கள்,அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது நன்றியை கூறிக்கொள்வதில் பெருமையடைகிறேன்.
சுவிஸ் நாட்டிலிருந்து குடும்பத்தோடு வருகை தந்து எல்லோரையும் கலகலப்பாக்கிய ரவிரத்னா குடும்பத்தினரையும் வாழ்த்துகிறேன்.திரு லீ .அன்டன் அவர்கள் எங்களை இளைமை காலத்துக்கு கூட்டிச்சென்று சிரித்து மகிழவைத்தார் .லண்டனிலிருந்து யாருமே வரவில்லை என்ற குறையை தீர்த்து எங்கள் செலவுகளில் தாங்களும் சிறுபங்களித்து உதவி செய்ய முன் வந்த வதனா பேரின்பதாசனுக்கும் நன்றி .இந்த ஒன்றுகூடல் இல்லை எந்த ஒன்று கூடலாக இருந்தாலும் என்னையும் சேர்த்து கொள்ளுங்கள் என்று முன்வந்த ஜெயசீலனையும் அணைத்துக்கொள்கிறேன்.
கொலண்டில் இருந்து வருகை தந்திருந்ததுடன் நிகழ்கால ஊர்நிலமைகளை தனது உரையில் அறியத்தந்த அருளானந்தம் அண்ணன் அவர்களுக்கும் அவரது பிள்ளைகளுக்கும் நன்றி. எங்கள் எல்லோருக்கும் முன்னின்று கிறில் போட்டு உணவு வழங்கிய கலீஷ்டஸ் வெலிங்டனையும் நான் மறந்துவிடவில்லை.டென்மார்க்கிலிருந்து வந்திருந்து எங்களுடன் ஒட்டி உறவாடி உதவிகளை செய்த டக்லஸ் தவராஜா ,ராஜன் குடும்பத்தினருக்கும் எனது நன்றிகள்.
எனது சிறுவயதில் என்னை அணைத்து அன்போடு பழகிய என் குணம் அக்காவை 45 வருடங்களின் பின் சந்திக்கவைத்து எனக்கு மகிழ்வை தந்த இந்த ஒன்றுகூடலுக்கு நன்றி சொல்ல நான் கடமைப்பட்டிருக்கிறேன் .
அடுத்து முது எலும்பாக நின்ற நமது இளம் சிறுத்தைகள் பென்சியா தான் பெற்றுக்கொண்ட கலையுயணர்வுகளை ஆர்த்தி ,பபிஸ்ரா ஆன்மேரி அஸ்வினி வேர்ஜினி ஜோய்சி ஜென்சி இவர்களுடன் கலந்து நிகழ்சிகளை தொகுத்து மிக அருமையாக நடத்தியமைக்கு சிரம் தாழ்த்திய நன்றி. மேலும் என்ன வேலையானாலும் சளைக்காமல் ஓடி ஓடி கல கலப்பாக உழைத்த அரவிந்தனுக்கும் நன்றி.
மற்றும் டென்மார்க்கிலிருந்து வந்த திரவியம் பிள்ளைகளுக்கும், வாழ்க வளம் பெற்று வாழ்கவே என்ற ஊரின் பாடசாலை கீதத்தை நினைவுபடுத்தும் பாடலைப்பாடி ஊறணி எமிலியானுஸ் கனிஸ்டவித்தியசாலையை ஞாபகமூட்டிச்சென்ற செல்வி. மதுவந்தி ரட்னராஜாவுக்கும் பாராட்டுக்கள்.
மற்றும் திருமணத்தால் நம்மூரோடு சேர்ந்து நமக்கு உதவி செய்தவர்களுக்கும் இறுதிவரை மண்டபத்தில் நின்று உதவி செய்த அனைவருக்கும் மற்றும் சிற்றுண்டிகள் செய்து தந்த அனைவருக்கும் எனது நன்றியை தெருவித்துக்கொள்கிறேன்.
மேலும் ஒன்றுகூடலுக்கு வராவிட்டாலும் தமது பணப்பங்களிப்பை செய்துதவிய சுதர்சன் கைத்தான்பிள்ளை மஞ்சுளா குருசுமுத்து ராஜன் செல்லையா ஆகியோருக்கும் எனது நன்றிகள்
இதில் நான் இன்னும் என் நினைவுக்கு வராமல் தவறவிட்டிருக்கும் மற்றும் எல்லோருக்கும் நன்றிகள். எத்தனையோ குருவானவர்கள் எங்களை கடந்து போனாலும் எங்கடை சுவாமி என்று இன்றும் நாம் அழைக்கும் ,எங்களது துன்பத்திலும் இன்பத்திலும் பங்கேற்று எங்களை வழிநடத்திவரும் அருட்தந்தை தேவராஜனுக்கும் எனது முழங்கால் மடித்து நன்றிகள்.
இவை எல்லாவற்றையும் ஓர் இணைப்பில் ஒரு நொடியில் படம் பிடித்து காட்டும் இணைப்பாளர் ரத்னராஜவுக்கு எனது சார்பிலும் நம் ஊர் சார்பிலும் மிகப்பெரிய நன்றி கூறி விடை பெறுவது உங்கள் அன்பில் ஒருவன்
அன்டன் அருள்தாசன் மரியாம்பிள்ளை
Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.
Howdy! Do you know if they make any plugins to help with SEO?
I’m trying to get my website to rank for some targeted keywords but I’m not seeing very
good results. If you know of any please share. Thanks!
You can read similar blog here: Eco blankets
They’ve seven yacht-like ships, every of which presents opulent suites, European-type butler service, personalised stationery and rather more.
sugar defender As
someone that’s constantly been cautious about my blood sugar level,
discovering Sugar Defender has been a relief. I feel so much extra in control, and my current examinations have actually shown favorable
renovations. Recognizing I have a reputable supplement to support my routine offers me peace of mind.
I’m so thankful for Sugar Defender’s influence on my
health and wellness!