ஊறணியின் அபிவிருத்தியைப் பொறுத்த மட்டில் UDO தொடர்ந்து இயக்கப்பட வேண்டுமென்பது தாயகம் வாழ் மக்களின் விருப்பமாகும். இன்று அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற ஆலய நிர்வாகக் கூட்டத்தில் இது முடிவு செய்யப்பட்டது.
தாயகம் வாழ் மக்கள் தமது சந்தாவை ஆலயத்திற்கு செலுத்துவதைப் போலவே UDO அறவிடும் உறுப்புரிமைப் பணத்தில் 1200 ரூபாவை ஆலயத்திற்கு செலுத்துவதன் மூலமாக ஊரில் தாயக உறவுகள் அனுபவிக்கும் சம அளவு உரிமையை UD0 உறுப்பினர்களும் அனுபவிக்க உரித்துடையவர் ஆவார்கள். UDO தாயகத்திலுள்ள எந்தவோர் அமைப்பினரையும் கட்டுப்படுத்தலாகாது. UDO தாயக பிரதிநிதிகள் ஊடாக கலந்துரையாடி ஊறணியின் அபிவிருத்திக்கு உறுதுணை புரியலாம். UD0 சம்பந்தப்பட்ட விடயங்களை விட மேலும் சில விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
ஆலய அருட்பணி சபை நிர்வாக உறுப்பினர்கள் 3 கூட்டத்திற்கு வருகை தராதுவிடின் தாமாகவே நிர்வாக உறுப்பினர் பதவியிலிருந்து விலகியதாகக் கருதப்படுவர்.
எதிர்வரும் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ஓர் சிரமதானம் ஊறணியில் செய்வதற்கு முடிவெடுக்கப்பட்டது.
எதிர்வரும் 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு குருத்தோலை ஞாயிற்றுத் திருப்பலியும் அதைத் தொடர்ந்து பெரிய சிலுவைப் பாதையும் ஊறணியில் இடம்பெறும். மேலும் எமது அருட்தந்தை ஊறணியில் தங்குவதற்குரிய ஏற்பாட்டை விரைந்து செயற்படுத்தி எதிர்வரும் வாரம் முடிவதற்கு முன்னர் அருட்தந்தையை ஊறணியில் குடியமர்த்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
பெரிய வாரத்திற்குரிய குருவானவர்க்குரிய திருப்பலி உடையை (சிவப்பு நிறம்) யாராவது அன்பளிப்பாக வழங்கலாம்.-viber