எமது ஊறணி கனிஷ்ட வித்தியாலயத்திற்கு 2 நிரந்தர ஆசிரியைகள் இன்று பிற்பகல் நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள்.
7 வருடங்கள் ஒரே பாடசாலைகளில் கடமையாற்றுகின்ற ஆசிரியர்களை இடமாற்றம் செய்வதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் இந்த 2 ஆசிரியர்களும் இடம் மாற்றப்பட்டு எமது பாடசாலைக்கு நியமனம் செய்யப்பட்டிருக்கின்றனர்.
பன்னாலை, மற்றும் மல்லாகத்தை சொந்த இடமாகக் கொண்ட ஆசிரியைகளே இவர்களாவர். 55 மற்றும் 53 வயது நிரம்பிய அனுபவசாலிகள்.
கத்தோலிக்க சமயத்தைச் சேர்ந்த ஓர் ஆசிரியையும் இந்து சமயத்தைச் சேர்ந்தவர் மற்றைய ஆசிரியையும் ஆவார்கள்.
நாளைய தினம் எமது பாடசாலையில் இவ்வாசிரியைகள் தமது கடமையை முறைப்படி கையேற்க இருக்கின்றனர்.
Your article helped me a lot, is there any more related content? Thanks!