Home / 04/11/2016 பின்பான ஊறணி / பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (20.12.2016) தெல்லிப்பளை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இணைத் தலைவர் கெளரவ நா.உ.சேனாதிராசா அவர்களின் தலைைமயில் நடை பெற்ற இக்கூட்டத்தில் கெளரவ நா.உ.சிறீதரன் அவர்கள் உட்பட அரச அதிகாரிகள் பலர் பங்கு பற்றியிருந்தனர். இதில் பிரதேச வாரியாக பல்வேறுபட்ட கட்டியெழுப்பப்பட வேண்டிய- புனரமைக் கப்பட வேண்டிய விடயங்கள் ஆராயப்பட்டன. இதில் எமது கோரிக்கைகளையும் முன்வைத்தோம். அவை வருமாறு.
1. ஆலயம் அமைப்பு
2. கரையோரப் பகுதிகளின் மீள் குடியேற்றம்.
3. எமது பாடசாலை, சேமக் காலை, ஆலய காணிகளின் முழுமையான விடுவிப்பு.
4. அடிப்படை வசதிகளான குடிநீர் , மலசல கூட வசதிகளை ஏற்படுத்துதல்.
5. படகுகள் தரிப்பிடங்களை ஆழப்படுத்துதல்.
6. கிராமிய அபிவிருத்திக் கட்டடம், நூல் நிலையத்தை மீளவும் உருவாக்குதல்.

போன்ற முக்கிய கோரிக்கைகளை முன் வைத்தோம். மிகச் சரியான முறையில் எம் அணுகு முறை இருந்த காரணத்தால் எமது கோரிக்கை அடங்கிய கடிதத்தை அந்த இடத்திலேயே பார்வையிட்ட இணைத்தலைவர் எமக்கு பேசுவதற்கு சந்தர்ப்பத்தையும் வழங்கினார். எனவே மிகத் துணிச்சலாக எமது கோரிக்கைகளை முன்வைத்தோம். 1982 இல் எமது ஆலயத்தை ஒரு கோடி செலவில் எமது இரத்தமும் வியர்வையும் சிந்தி கட்டி முடித்திருந்தோம். அதன் தற்போதைய பெறுமதி 15 கோடிகளுக்கு மேற்பட்டதாகும். வெறும் 10 இலட்சமே அரசாங்கம் இழப்பீடாக தர இருக்கிறதென அறிகிறோம். இது எமது செலவுடன் ஒப்பிடவே முடியாத சிறு தொகை. எனவே அரசுக்கு மீளவும் அதேயளவான பிரமாண்டமான ஆலயத்தைக் கட்டித் தர வேண்டிய கடப்பாடு உள்ளது. இதோடல்லாமல் 2010 வழிபாட்டிற்கு எசன்ற போது இருந்த ஆலயம் இன்றில்லை. எம்மிடம் ஆதாரம் உள்ளது. அதற்குப் பின்னர் போர் நடைபெறவில்லை. அவ்வாறெனின் ஏன் இடித்து அழிக்கப்பட்டது? அடுத்த நிதி ஒதுக்கீட்டிலேயே உடனடியாக நிதி ஒதுக்கி ஆலயத்தை மீளவும் கட்டித் தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என எம்மால் தெரிவிக்கப்பட்டது. உடனடியாகவே இணைத்தலைவர் என்னைத் தன்னருகில் அழைத்து பெரிய நிதியொதுக்கீட்டில் இதற்குரிய நிதியை ஒதுக்கித் தருவதற்கு ஆவன செய்வதாக உறுதியளித்தார். எமது கருத்தையே வலி வடக்கு மீள்குடியேற்றச் சங்கத்தின் தலைவர் திரு.குணபாலசிங்கம் அவர்களும் எமக்கு ஆதரவாக பிரதிபலித்தார். இது மட்டுமல்லாது வான் தோண்டுதல் தொடர்பாகவும் எம்மால் பேசப்பட்டது. இதனையும் மற்றும் அனைத்துக் கோரிக்கைகளையும் ஆராய்ந்து தீர்த்து வைப்பதற்குரிய நடவடிக்கைகளை தான் எடுப்பதாக எம்மிடம் உறுதி படத் தெரிவித்தார். அத்துடன் ஜனவரி மாத ஆரம்பத்தில் கரையோர குடியிருப்புக்கும் தொழிலுக்கும் அனுமதி கிடைத்து விடும் என்றும் அவர் தெரிவித்தார்.

About ratna

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

slot anti rungkat 2023>BEJOBET: Situs Slot Online Gacor Anti Rungkat Terbaru 2023 slot anti rungkat 2023>MPOSUN: Link Situs Judi Online Slot Gacor Terbaru slot gacor >BEJOBET: Situs Judi Online Slot Gacor Terbaik Di Indonesia slot gacor 2023 > daftar situs slot gacor 2023 terpercaya nomor 1 Di Indonesia Gampang Menang