01. -03. 06. 2018 மதியம் 12.30 மணிக்கு விருந்தும் பி.ப 4.00 மணிக்கு கொடியேற்றமும் திருப்பலியும் இடம் பெறும்.
விருந்து வேலைகளுக்குப் பொறுப்பாளர்களாக திரு.குளோட், திரு.இராசா, திரு. நியூட்டன் ஆகியோர் நியமிப்பு.
02. திருவிழா மற்றும் விருந்து பங்களிப்பாக வெளிநாடு, உள்நாட்டு குடும்பம் ஒன்றுக்கு குறைந்த பட்சத் தொகை 2000 ரூபா.
பிரதேசவாரியாக நிதி பொறுப்பாளர்கள்.
* யாழ்ப்பாணம் – திரு.அ.புஸ்பராசா
*இளவாலை – திரு.மனோ
* மானிப்பாய் – திரு.யோகராசா
* பருத்தித்துறை – திருமதி தருமராணி
மேலும் ஆலய தாபரிப்புப் பங்களிப்பாக 2018ம் ஆண்டு மாசி மாதத்திலிருந்து மாதம் 150 ரூபா அறவிடப்படும். இதன்படி மாசி மாதத்திலிருந்து ஆனி மாதம் வரையான கொடுப்பனவை உடனடியாக வழங்குமாறு வேண்டுகோள்.
தாபரிப்புப் பணம் செலுத்துவதன் மூலமே ஆலயத்தின் அங்கத்தவராக குடும்பம் இணைந்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.
03. புனிதரின் திருவிழாவிற்காக கோயிலைச் சுற்றி வர நடுவதற்கான 100 கம்பங்கள் மற்றும் கொடிச் சீலைகளுக்கான நிதியை (கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபா) நன்கொடையாக லண்டனில் உள்ள ஜெகன் குடும்பத்தினர் அனுப்பி வைத்தனர்.
04. கோயிலின் பீடத்தின் பின் -பக்க அறைக் கட்டுமானத்திற்கான (ஒரு லட்சம் ரூபா) செலவை பிரான்சில் உள்ள திரு.செ. எமில்யூலியஸ் (சூட்டி) பொறுப்பேற்றிருக்கின்றார்.
* நற்கருணைப் பேழைக்கான நன்கொடையை (80 ஆயிரம் ரூபா) டிலான் – தமயந்தி குடும்பம் வழங்குகின்றனர்.
05. பாவசங்கீர்த்தன (தட்டிகள் 2) தளபாடங்களை சாந்தசீலி குடும்பம் நன்கொடையாக வழங்கி யுள்ளனர்.
06. திருவிழா ஒலி, ஒளி, பந்தல், கதிரை ஒழுங்குபடுத்தல் பொறுப்பாளராக திரு.மனோ நியமிக்கப்பட்டுள்ளார்.
07.புனிதரின் திருவிழா 9 நவ நாட் திருப்பலியுடன் கொண்டாடப்படும். பிற்பகல் 4.30 மணிக்கு செபமாலையுடன் ஆரம்பமாகும்.
08. புனிதரின் திருப்பவனி (கூடு சுற்றல்)12.06.2018 பிற்பகல் 4.00 மணிக்கு ஆரம்பமாகி கூடு ஆலயத்தை வந்தடைந்ததும் நற்கருணைத் திருவிழா நடைபெறும்.
09. திரு நாட்திருப்பலி 13.06.2018 அன்று காலை 6.30 மணிக்கு செபமாலையுடன் ஆரம்பமாகி 7.00 மணிக்கு திரு நாள் திருப்பலி இடம் பெறும்.
10.அன்னை மரியாளின் திருச்சொருபம் வைக்க வேண்டுமென்ற அன்னையின் பக்தர்களின் வேண்டுகோளிற்கிணங்க அதற்கான கூட்டிற்கான நிதியை (40 ஆயிரம் ரூபா) யாராவது அன்பளிப்புச் செய்ய முடியும்.
11. ஆலயத்தில் பாடல் இசைப்பதற்கான கருவி organ (Stand உடன்) யாராவது ஆலயத்திற்கு அன்பளிப்புச் செய்ய முடியும்.
மாதா கூடு அன்பளிப்பு
நேற்றைய வேண்டுகோளிற்கிணங்க திருமதி திருச்செல்வம் மேரி ஸ்ரெலா (தம்புத்துரை-மணி) குடும்பத்தினர் மாதா கூட்டை அன்பளிப்பாக வழங்குகின்றனர். இக்குடும்பத் தினருக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் புனித அன்னையின் பரிந்துரைக்காய் வேண்டி நிற்கின்றோம்.