ஊறணி கிராமத்திற்கு கடற்கரை பக்கமாக ஒரு வீதியை அமைத்து தர எமது ஊர் மக்கள் எம்மிடம் கேட்டது நீங்கள் அனைவரும் அறிந்ததே. ஆனால் புலம் பெயர் நாடுகளில் உள்ள எமது ஊர் சங்கங்களோ அல்லது தனி நபர்களோ இந்த விடயத்தை பொறுப்பெடுக்காததால் சுவீட்சில் வசிக்கும் ராஜன் தனக்கு தெரிந்த எமது ஊர் நண்பர்களுடன் கதைத்து அவர்களினூடாக எம் ஊரவர்கள் எல்லோரிடமும் பணம் பெற்று இத்திட்டத்தை செய்து முடிப்பதற்கு ஒரு திட்ட வரைபைகேட்டிருந்தார். அதை இங்கே வெளியிடுகிறோம்
இந்த திட்ட வரைபு தொடர்பாக உங்களுக்குரிய சந்தேகங்களை எங்களுடன் தீர்த்து கொள்ளலாம்
இது முற்று முழுதும் ஊரை நோக்கிய அபிவிருத்தித்திட்டம்
இதில் அனைவரும் உங்கள் பங்களிப்பை வழங்குங்கள்
சில நாட்டில் இருந்து ஒரு சிலர் பணம் சேர்த்து தருவதற்கு முன்வந்துள்ளார்கள்
அதே போல் மற்ற நாடுகளிலும் இருந்தும் பணம் சேர்த்து தர எம்முடன் இணைந்து கொள்ளுங்கள்
இந்த திட்டம் தொடர்பான கணக்கு விபரங்கள் அனைத்தும் அங்குள்ள மூவருடன் இங்குள்ளவர்களும் இணைந்து அறியத்தருவார்கள்
இதற்கு பொறுப்பாக நாட்டிலிருந்து யோண்சன் குளோட் எட்வேட் விஜயகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
திட்ட இணைப்பை பார்வையிடவும்