இன்று ரட்ணாவும், ராஜனும்(SWISS) ஊரில் கடற்கரை பாதை அமைக்கும் திட்டத்திற்கென தெரிவுசெய்யப்பட்ட அங்கத்தவர்களான குளோட் ,ஜோன்சன், விஜயகுமார் ஆகியோருடன் தொலைபேசி மூலம் ஒரு உரையாடலை ஏற்படுத்தி இருந்தார்கள் . அந்த உரையாடலின் விபரங்கள் கீழ்வருமாறு .
இந்த திட்டத்திற்கான நிதியை மார்ச் 31 இக்கு முன் சேர்த்து தரும்படி கேட்டிருந்தார்கள். நிதி கிடைக்கும் பட்சத்தில் இம்மாதமே வேலையே முடிக்கலாம்
இந்த திட்டத்திற்கென நாட்டில் Join account ஒன்றை இந்த உறுப்பினர்களில் இருவர் சேர்ந்து திறப்பது. கணக்கு வழக்குகளை இந்த குழுவே எமக்கு அறியத்தரும் . இதை ஊறணி viber இல் ரட்ணராஜா வெளியிடுவார்.
கணக்கு இலக்கம் விரைவில் அறியத்தரப்படும்.
ஒருசில வேலைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்பது நீங்கள் அறிந்ததே வரும் புதன் கிழமைஇலிருந்து இந்த வேலைகளை முழுமூச்சுடன் செய்யப்போவதாக தெரிவித்தார்கள் . இதற்கு இப்பொது சேர்ந்திருக்கும் நிதியை பாவிக்க இருக்கிறார்கள்.( கடல் தொழில் சங்க நிதிஉதவி ,குட்டி அண்ணா கியூடெக் நிதி )
இந்த வீதியை எவ்வளுவு விரைவில் அமைத்து கொடுக்கிறோமோ அவ்வளவிற்கு பிரதேச செயலகம் விரைவில் வீதியை அமைத்து தரும் என அவர்கள் நம்புகிறார்கள்
வெளிநாடுகளில் சேரும் நிதியை கட்டம் கட்டமாக ஊருக்கு அனுப்புவது அதே நேரம் வேலைத்திடத்தை தொடர்ந்து செய்துகொண்டிருப்பது.
இந்த வேலை திட்டத்திற்கு தம்மோடு இணைந்து வெளியூரில் வசிக்கும் ஊறணி உறவுகளும் களத்தில் கைகொடுத்து உதவ முன்வரவேண்டும் என்று இந்த குழுவினர் எதிர்பார்கிறார்கள் . பார்வையாளர்களாக அல்லாமல் வேலைகளில் பங்காளர்களாக இருப்பதை அவர்கள் விரும்புகிறார்கள் .
வெளிநாட்டில் வசிக்கும் ஊர் உறவுகள் தமது நிதிப் பங்களிப்பை கீழ்வரும் மூன்று முறைகளில் எதாவது ஒரு முறையில் இந்த திட்டத்திற்கு சேர்ப்பிக்கலாம்.
முறை 1. உங்கள் நாடுகளில் உள்ள தொடர்பாளர்களிடம் கொடுப்பதன் மூலம். அவர்கள் எமக்கு மேலே குறிப்பிடப்பட்டுள்ள கணக்கு இலக்கத்திற்கு அனுப்பி வைப்பார்கள்
முறை 2. நீங்களே மேலே குறிப்பிடப்பட்டுள்ள கணக்கு இலக்கத்திற்கு அனுப்பி வைப்பது. இதை நீங்கள் எங்களுக்கு தெரியப்படுத்துவது அவசியமாகும் .
முறை 3. உங்கள் உறவினர் மூலம் ஊரிலேயே மேலே தெரிவுசெய்யப்பட்ட அங்கத்தவர்களான குளோட், ஜோன்சன் ,விஜயகுமார் ஆகியோரில் யாராவது ஒருவரிடம் ஒப்படைப்பது. இதை எங்களுக்கு தெரியப்படுத்துவது அவசியமாகும்.
ஆகவே உறவுகளே தாமதிக்காமல் உங்கள் பங்களிப்பை செய்து நாம் பிறந்து வளர்ந்த ஊரின் வளர்ச்சிக்கு உதவுவோம்.
ஊர் நமக்கு என்ன செய்தது என்பதை விடுத்து நாம் நம் பிறந்த ஊருக்கு என்ன செய்தோம் என்று எம்மை நாமே கேட்டுக்கொள்வோம்.
நன்றி
கடற்கரை பாதை அமைக்கும் திட்டத்திற்கான குழு
வெளிநாடுகளில் உள்ள நிதி சேர்க்கும் தொடர்பாடர்களின் விபரங்களை விரைவில் வெளியிடுவோம்
இந்த தொடர்பாடர்களிடம் இத்திடத்தைபற்றிய கேள்விகளை தவிர்த்து கேட்க விரும்பும் கேள்விகளை பொதுவெளியில் viber இலோ அல்லது எங்களிடம் கேட்பதன்மூலம் அறிந்து கொள்ளலாம்
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.