எமது பங்குத்தந்தையின் 75 ஆவது பிறந்த நாள் கொண்டாட்டத்தை பங்கில் உள்ள அனைத்து ஆலயங்களின் அருட்பணி சபைகளும் இணைந்து ஒரே இடத்தில் நடாத்துவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பலாலி, மயிலிட்டி,அன்ரனி புரம், முலவை, வள்ளுவர்புரம் ஆகிய அருட்பணி சபைகளை எதிர்வரும் சனிக்கிழமை ஊறணிக்கு அழைத்து கலந்துரையாடி விழாவை நடாத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஊறணியில் – சிறப்பாக நடாத்துவதற்கே முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஊறணி சார்பில் வாழ்த்து மடல் ஆக்கப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
இவ்விழாவில் இணைந்து சிறப்பிக்குமாறு வெளிநாடு வாழ் ஊறணி அமைப்புக்களுக்கு ஊறணி அருட்பணி சபையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
எமது ஆன்ம தந்தையின் – எமது ஊறணி பங்குத்தந்தையின் 75 ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடுவதென்பது அனைவரதும் கடப்பாடாகும். எமது குடும்பத் தந்தைக்கு நாம் தான் விழா எடுக்க வேண்டும். எனவே இன்னார் இவ்வளவு தாருங்கள் என நாம் எவரையும் கட்டாயப்படுத்தவில்லை. அவரவர் விரும்பின் பண அன்பளிப்பை நல்க முடியும்.
ஊறணியில் எதிர்வரும் 10 ஆம் திகதி பிற்பகல் விழாவை நடாத்தத் திட்டமிடுகின்றோம்.கிட்டத்தட்ட 40 குருக்களுக்கு மேல் வருகை தரவிருக்கின்றனர். இவர்களுக்கு இரவு உணவு வழங்கப்படும்.மேலும் பிற பங்குகளிலிருந்தும் 500 பேர்களை எதிர்பார்க்கின்றோம். இவர்களுக்கு சிற்றுண்டிகள் மற்றும் தேனீர் விருந்துபசாரம் வழங்க ஆயத்தமாகின்றோம். மழை காலமாக விருப்பதால் பந்தல் போட வேண்டிய தேவையும் காணப்படுகிறது. தற்பொழுது மொத்தம் 80000 ரூபா தேவையென மதிப்பிடப்பட்டிருக்கிறது.
அத்துடன் பங்கில் இடம்பெற்றுள்ள ஏனைய ஆலயங்களின் அருட்பணி சபையினரின் கூட்டம் நாளை
ஊறணியில் இடம் பெறுகின்றது. நாம் உள்வீடென்பதால் சிற்றுண்டி மற்றும் குருக்களிற்கான விருந்துபசாரங்களிற்கு அவர்களிடமிருந்து பணத்தை அறவிடுவது அழகல்ல. ஏனைய பங்களிப்பை அவர்கள் நல்குவார்கள் என நினைக்கிறோம்.
எனவே இதுதான் நிலவரம் ஊர் – ஆலயப்பங்குத் தந்தையின் விழாவைச் சிறப்பிப்பதற்கு அவரவர் விருப்பப்படி பங்கை நல்கலாம்.