ஊறணி காங்கேசன்துறையை சேர்ந்த அருட்சகோதரி செலஸ்ரினா(ஆன் ராஜேஷ்)19.01.2020 அன்று இளவாலை திருக்குடும்ப கன்னியர் மடத்தில் இறைவன் மடியில் நித்திய இளைப்பாற்றியடைந்தார்.
திருக்குடும்ப கன்னியர் மடத்தில் இணைந்து 66 வருடங்கள் இறை சேவைக்கென தம்மை அற்பணித்துக்கொண்ட இவர்,
காலம் சென்றவர்களான திரு/திருமதி. இரபாயல் மாத்தம்மா தம்பதிகளின் மகளும், காலம் சென்ற சகோதரர்களான திருமதி.செல்வராணி(தாயி சம்மா) மரியாம்பிள்ளை, அருட்சகோதரர் ரொபேர்ட் இரபாயல், திரு.ஸ்டீபன் இரபாயல், மற்றும் அருட்பிரகாசம் இரபாயல்(யேர்மனி), சேவியர் இரபாயல்(கனடா), அருட்சகோதரி லில்லி றீட்டா இரபாயல்(இலங்கை) ஆகியோரின் அன்புச்சகோதரியுமாவார்.
மலேசியாவில் பிறந்தவரான இவர் இலங்கையின் பல்வேறு இடங்களில் உள்ள திருக்குடும்ப கன்னியர் மடங்களில் சேவையாற்றியுள்ளதுடன் யாழ்.புனித பத்திரிசியார் ஆரம்ப பாடசாலையில் ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார். இவர் எழுபதாம் ஆண்டின் முற்பகுதியில் மலையகத்தில் உள்ள வறிய மக்களுக்கு சேவையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்னாரது புகழுடல் 21.01.2020 செவ்வாய் கிழமை அன்று முற்பகல் 10.00 மணிக்கு இளவாலை திருக்குடும்ப கன்னியர் மடத்தில் திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டு அதன் பின் அங்குள்ள சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இத்தகவலை ஊரவர் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொளப்படுகின்றீர்கள்.
தகவல்
குடும்பத்தினர் .