அழகுக்கருமையும் முத்துக் களாய்
மின்னும் ஈர்ப்புப் புன்னகையும்
மூக்கு அமர்ந்த கண்ணாடியுமாய்
நீக்கமறநேசமாய் பலர் நெஞ்சில்
நிமிர்ந்து நிற்கிறது நின்னுருவம்
கல்வியை உறுதியாய் கரம்பிடித்து
காதலாய் ஆசிரியத் தொழில்பிடித்து
சேவையை வாழ்வின் கோவில்போல
பிறந்தஊர் ஊறணி மண்ணுயர்த்த
கல்வியே காலத்தின் ஏற்றமென
பெற்றோர்க்கும் பிள்ளைகட்கும் இளையோர்க்கும்
பெரும் பாடாய் எடுத்துரைத்தும்
ஏற்ற பணியிடத்தும் எம்மாசான்
மாண வச்செல் வங்களை
கண்ணின் ஒளியாக கற்றலூட்டி
வாழும் மண்ணில் அவருயர்வுக்காய்
மண்ணைப் பிரியும்வரை அவருழைத்து
மரணமும் மறைத்திடா வல்லவராய்
கற்சிலையாய் காண்படமாய் −பலர்
மனத்திலும் தாய்நிலத்திலும்
வாழும் அருவமகான் ஆசான்றோமான்.
நன்றி .அருள்தாஸ்