மரநடுகை மாதத்தை முன்னிட்டு ஊறணி புனித அந்தோனியார் ஆலய வளவில் ஊறணியின் இளைஞர் அணியினரால் மரம் நடுகைத் திட்டம் செயற்படுத்தப்பட்டது.
முதலில் எமது பங்குத்தந்தை அவர்கள் மாமரக் கண்டொன்றை நாட்டி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.அடிகளாரைத் தொடர்ந்து எமது இளைஞர்களால் நிகழ்வு தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது.
ஏலவே லயன்ஸ் கிளப் மற்றும் நடேஸ்வராக் கல்லூரியின் பழைய மாணவரால் வழங்கப்பட்ட மரக்கன்றுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட மரங்களே இவ்வாறு நடுகை செய்யப்பட்டன.குருமனையின் முன்பக்கம் மாமரக்கன்றுகள் மற்றும் மர முந்திரிகை மரங்களும் குருமனையின் பின் பக்கம் தென்னங்கன்றுகளும் நடுகை செய்யப்பட்டன.
தொடர்ந்தும் அடுத்த வாரமளவில் Rds கட்டடத்தின் முன் பின் பக்கங்களிலும் மற்றும் கட்டப்படும் புதிய ஆலயத்தின் இரு மருங்கிலும் கன்றுகள் நடப்படவிருக்கின்றன. தேக்கு, பாக்கு, இலுப்பை, மலைவேம்பு போன்ற மரங்களே நடுகை செய்யப்படவிருக்கின்றன. இன்றைய தினம் ஆர்வத்தோடு கலந்து சிறப்பித்த அனைத்து இளைஞர்களுக்கும் இளைஞர் அணி தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.
-சூரியன்