ஊறணியில்(kks ) காணிகள் பதியும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தெல்லிப்பளை பிரதேச செயலகத்திலிருந்து வருகை தரும் விசேட குழுவினரே எமது ஊறணி கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடத்தில் வைத்து காணிகளைப் பதிவு செய்கிறார்கள். நேற்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பித்த இச்செயற்பாடு எதிர்வரும் திங்கள் முதல் வெள்ளி வரையும் நடைபெறவிருப்பதாக GS அறிவித்துள்ளார்.
காணியின் உரிமையாளர் அல்லது காணியின் பராமரிப்பாளர் காணி உறுதியின் போட்டோப் பிரதியுடன் சென்று காணியைப் பதிவு செய்ய முடியும். காணி பதிவு செய்யும்போது ” காணி எத் தேவைக்குப் பயன் படுகிறது? எத்தகைய தொழில் முயற்சிகளை காணியில் மேற்கொள்ளலாம் ? தறபொழுது காணி அறிக்கையிடப்பட்டிருக்கிறதா? போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியிருக்கும்.
சரி காணி பதியப்படாது விட்டால் என்ன நடக்கும்?
என்ன பராமரிப்பில்லாத காணியாக அடையாளப்படுத்தப்பட்டு அரச உடைமையாக சுவீகரிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
-இது எமது ஊர் viber group இல் வந்த பதிவு 27.11.2020
ஊர் அன்பர் ஒருவரின் கேள்வி-1
எழுத்துமூல ஆவணங்கள் ஏதாவது காட்டப்பட்டதா?
என்ன நோக்கம் எதற்காக யாரின் உத்தரவில் இப்பதிவு கள் மேற்கொள்ளப்படுகிறது என்பதற்கான ஆவணமாவது விதானையாரால் காட்டப்பட்டதா?
நான் அறிந்தவரையில் அரச காணி விபரங்கள் மட்டுமே கோரப்பட்டுள்ளது.
இந்த பிரதேச செயலர் பிரிவில் மட்டுமே இவ்வாறான பதிவு மேற்கொள்ளப்படுகிறது.
உறுதிப்படுத்தவும் மக்களை அலைக்களிப்பதும் தேவையற்ற செலவை ஏற்படுத்துவதும் பதட்டப்படுத்துவதும் தடுக்கும் வகையில் உறுதிப்படுத்துவது அவசியம்.
பதில் :
அண்ணா, உங்கள் கேள்வி மன ஆறுதலை தந்தால் கூட உண்மை இதுதான். மத்திய காணி அமைச்சின் உத்தரவுக்கிணங்கவே தனியார் காணி பதிவுகள் இடம் பெறுகின்றன.
“அரச காணிகளைப் பதிவு செய்தல் ” என்ற Uதிவுக்கு ஊடாகவே தனியார் காணிகளும் Uதிவு செய்யப்படுகின்றன. இந்தப் பதிவுகள் உதாசீனப்படுத்தப்பட்டால் பின்விளைவுகள் நிச்சயமாக இருக்கும்.
அரச காணிகளை புதிதாகவும் உருவாக்க நினைக்கிறது இந்த அரசு.அதாவது பராமரிக்காத காணிகள் அரசுடைமையாகலாம். அதுகும் முக்கியமாக இது வடக்கில் விரைவுபடுத்தப்படலாம். முக்கிய கேந்திர நிலையங்களில் (பலாலி விமான நிலையத்தை அண்டிய – பாரிய படை முகாம்கள் இருக்கிற எமது பிரதேசங்களில்) கையகப்படுத்தலாம். ஆர்ப்பாட்டமில்லாமல் அரசு சுவீகரித்துக் கொள்கின்ற புதிய முயற்சி இது. GS என்பவர் அரசின் பிரதிநிதி. எனவே அவரின் ஊடாக மேற்கொள்கின்ற பதிவு நேற்று எமது இடத்தில் ஆரம்பமாகிவிட்டது. இந்த உண்மை கசக்கும் தான். ஆனால் பதிவு செய்யாது விடின்…. அது உங்கள் தற்துணிவு. ஆதாரம்…..??? GS பதிவு செய்யும் form
கேள்வி-2
எங்களின் தவறு என்னவெனில் GS இடம் ஏன் என்னத்திற்கு அதற்கான ஆவணங்களை காட்டுமாறு கேட்காமல் விடுவதே. நான் சொல்வது இவ்வாறான பதிவிற்கு GS ற்கு கட்டளை இட்ட ஆவணம் அல்லது அரச ஆவணத்தை காண்பிக்குமாறு கேட்பதற்கு ஏன் தயக்கம் காட்ட வேண்டும் என்பதே.
பதில் :
நான் மேலே போட்ட Form 50 சேர்ந்த ஒவ்வொரு கட்டுக்களாய் அமைந்த புத்தகங்கள் தவிர்ந்த எந்த ஆவணமும் தன்னிடம் இல்லையென்றும் தன் மேல் அதிகாரி பணித்ததின் பேரில் பதிவுகள் இடம் பெறுவதாகவும் மேலதிக தகவல்கள் தேவையாயின் மேலதிகாரிகளையே தொடர்பு கொள்ளுமாறு GS தெரிவித்துள்ளார்.
நாம் கிராம சேவையாளருடன் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை அதனால் மேலதிக விபரங்கள் கிடைக்கவில்லை பிரதேச சபைஅதிகாரிகள் யாராவது இதற்கு பதில் தருவார்களா?
அத்துடன் form 50 ஐ பார்க்க முடியுமா?
urany.com