ஆவளை தையிட்டி பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் ஊறணி காங்கேசன்துறை பகுதியில் கடலில் குளிக்கச் சென்ற போது அலையில் சிக்கி காணமல் போயுள்ள நிலையில் அவர்களைத் தேடும் பணியில் அப்பகுதியைச் சேர்ந்தவர்களும், கடற்படையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
வலிகாமம் வடக்கு பகுதிக்குட்பட்ட பலாலி பொலிஸ் பிரிவு, ஊறணிக்கடலில், ஆவளை தையிட்டி பகுதியைச் சேர்ந்த சிவச்சந்திரன்-நிரோசன்(19 வயது) மற்றும் மாசிலாமணி-தவச்செல்வம் (19 வயது) ஆகிய இளைஞர்கள் இருவர் கடல் குளிக்கச் சென்ற போது அலையில் சிக்கி காணாமல் போயுள்ளனர்.
இவ்வாறு அலையில் சிக்கி காணாமல் போயுள்ள மாசிலாமணி-தவச்செல்வம் என்ற இளைஞருக்கு திருமணமாகி 10 நாட்களே ஆகியுள்ளதாகவும் இவர்கள் thaal sevene பகுதிக்கு முதலில் குளிக்க சென்றார்கள் அங்கு அனுமதிக்கப்படாமையினால் ஊறணிக்கடலில் குளிக்க வந்தார்கள் என தெரிவிக்கப்படுகிறது
அவர்களில் சிவச்சந்திரன்-நிரோசன் என்பவரின் சடலம் நேற்று (29.11.20)கரையொதுங்கியதாகவும் மற்றவரின் சடலம் இன்று (30.11.20)மீட்கப்பட்டதாகவும் தெருவிக்கப்பட்டது