மீள்குடியேற்ற பாடசாலையாகிய எமது ஊறணி எமிலியானுஸ் கனிஷ்ட வித்தியாலத்திற்கு
புலம்பெயர் நாடுகளில் இருந்து பழைய மாணவர்களாலும் நலன் விரும்பிகளாலும் பல்வேறு செயற்பாடுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதில் பால் வழங்கும் திட்டத்துக்கு புலம்பெயர்ந்த நாட்டில் வசித்து வரும் மாவிட்டபுரத்தை (பிரான்சை) சேர்ந்த திரு திருமதி சிவானந்தவல்லி (அனந்தி) அவர்கள் தமது குடும்பம் சார்பாக 22 மார்ச் 21 இல் இருந்து ஒவ்வொரு நாளும் இரண்டு லிட்டர் பாலை காலைவேளையில் 1982 AL மகாஜனா கல்லூரி பழைய மாணவி சார்பாக வழங்கி வருகின்றார் என்பதை மகிழ்வுடன் அறியத் தருகின்றேன்.
ஒவ்வொரு நாளும் காய்ச்சியபால் வழங்கப்படுகிறது. காலை 7.30 மணிக்கு பிள்ளைகளுடனான ஒன்று சேர்தலில் பால் வழங்கி பாடசாலை ஆரம்பிக்கப்படும் என அதிபர் கூறினார்.
தற்போது 18 மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள்
அதிபர் + 5 ஆசிரியர்கள்