எமது ஊறணி எமிலியானுஸ் கனிஸ்ட வித்தியாலயத்தின் அதிபருடன் பாடசாலை அபிவிருத்தி தொடர்பாக zoom இனூடாக நடந்த கூட்டத்தின் விபரம்
பங்குபற்றியவர்கள் 16
1. ஆசிரியர் தளபாடம்
இவற்றை 5 பேர் அன்பளிப்பு செய்ய முன்வந்துள்ளார்கள்
மரியா டானியல், ரூபி ஜோசேப் ,சூரியன்,அருட்செல்வி, யஸ்மின் உதயச்செல்வி
2. சுற்றுமதில்/நுழைவாயில்
தற்போது இது சம்பந்தமாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை இது கோவில்-ஊர் சம்பந்தப்பட்டது ஊரவர்கள் எடுக்கும் தீர்மானத்திற்குப்பின் இது ஆராயப்படும்
3. வைற் போட் +பிளானல் போட்
இதை மனோகரசீலன் அந்தோனிமுத்து (canada) அன்பளிப்பு செய்கிறார்
4. திறன் வகுப்பறை (smart class room)
5. மாணவர் நூலகம்
மேற் சொன்ன (4,5) விடயங்கள் பழைய பாடசாலை கட்டிட புனரமைப்புக்குப்பின் முடிவுசெய்யலாம் என்று ஆலோசனை முன்வைக்கப்பட்டது
6. பழைய பாடசாலை கட்டிடம் புனரமைப்பு/அகற்றுதல்
ஊர்மக்களின் விருப்பத்திற்கமைய பாடசாலையை புனரமைப்பதாகவும் அதற்கான செலவீனம் பற்றிய விபரத்தை சம்பந்தப்பட்ட திணைக்களங்களிடமிருந்து பெற்று தருவதாகவும் அதிபர் சொல்லி உள்ளார்
பொதுவாக பெரும்பாலான இந்த திட்டங்களுக்கான நிதியை, சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் நிதி வழங்காதென்றும் 5 வருடங்களாக தான் காத்திருந்தும் ஒன்றும் நடக்கவில்லை என்றும் அதனால் தான் பழைய மாணவர்களையும் நலன் விரும்பிகளையும் நாடியதாக சொல்கிறார். அயலில் உள்ள பாடசாலைகளிற்கு பழைய மாணவர்களே உதவிவருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அனைத்து உரையாடல்களையும் எமது uraniyaar fb இல் பார்க்கலாம்
https://www.facebook.com/587047096/videos/10157718973312097/
மீண்டும் இரண்டு மாதங்களுக்கு பின் அதிபருடன் ஒரு கூட்டம் ஒழுங்கு செய்யப்படும்
முக்கிய குறிப்பு:
நாம் அதிபரை கேட்டுக்கொண்டதிற்கிணங்க பாடசாலையின் பெயரை எமிலியானுஸ் என்று மாற்ற முடியும் என்றும் அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறும் கேட்டுள்ளார்.
உறவுகளே உங்களிடம் எமிலியானுஸ் பாடசாலை என்ற பெயருடன் சான்றிதழ்களாகவோ, படங்களாகவோ வீடியோவாகவோ உறுதிப்படுத்தக்கூடிய ஆவணங்கள் இருப்பின் எனக்கு அனுப்பிவைக்கவும்