Home / 04/11/2016 பின்பான ஊறணி / ஊறணி வரலாறு – மலர் வெளியீடு

ஊறணி வரலாறு – மலர் வெளியீடு

அன்புறவுகளுக்கு வணக்கம்,
ஊறணி வரலாற்றை பதிவு செய்வதற்காக வரலாறு சுமத்தியிருக்கும் கடினமான வேலைத்திட்டம் ஆரம்பமாகிவிட்டது. இதற்கான முதற் காலடித்தடத்தை 18.11.2021 நடந்த அருட்பணி சபைக் கூட்டத்தில் எடுத்து வைத்தோம். அன்றைய தினத்தில் மலர்க்குழு ஸ்தாபிக்கப்பட்டு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஊறணி வரலாற்று நூலின் இதழ் ஆசிரியராக அருட்திரு கு.அன்ரனி பாலா அடிகளாரும், இணை ஆசிரியர்களாக திரு.அ. அருள் ஜெயரட்ணம், திருமதி.பி. றூபினி ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர். மலர்க்குழுவின் உறுப்பினர்களாக திரு.மே.சாந்தசீலன், திருமதி.ஞா.லதா, திரு.இ.விஜயகுமார், திரு.பி.றெஜிறஜீவன், திருமதி.யூ.சாந்தசீலி ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.

மலரில் இடம்பெறும் முக்கிய அம்சங்கள்.

  1. ஊரின் வரலாறு
  2. ஆலயங்களின் வரலாறு.
  3. கலை பண்பாடு
  4. விளையாட்டு.
  5. தொழில்.

மேற்படி துறைகள் இனங்காணப்பட்டு சில துறைகளுக்கு தகவல்கள், தரவுகள் சேகரிப்புக்குப் பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர்.
விளையாட்டுக்கு திரு.அ. பிலிப்லியோனாட், தொழில்களுக்கு திரு.செ.ஜோன்சன், கல்வி, வேலை வாய்புகளுக்கு திரு.மே.சாந்தசீலன், ஊறணி அபிவிருத்திச் சங்கத்திற்கு திரு.இ.விஜயகுமார், செவ்விகளுக்கு திரு.பி.றெஜிறஜீவன் ஆகியோர்கள் நியமிக்கப்பட்டனர்.
ஏனைய துறைகளுக்கான பொறுப்புக்கள் வெளிநாடு வாழ் ஊறணி உறவுகளுடனான சந்திப்பில் இறுதி செய்யப்படுவர் என்றும் அவர்களின் பூரண ஒத்துழைப்போடு வராலாற்று நூல் தயாரிக்கப்படும் என்ற தீர்மானத்தோடு கூட்டம் நிறைவு பெற்றது.
அதற்கமைய பிரான்ஸ், லண்டன் நிர்வாகத்தினருக்கு முறைப்படி அறிவிக்கப்பட்டு மலருக்கான பிரதிநிதிகளை நியமிக்குமாறு கோரப்பட்டது. அதன் பிரகாரம் பிரான்ஸ் நிர்வாகம் தமது தரப்பின் பிரதிநிதிகள் இருவரை உடனடியாகவே நியமித்து ஊக்கம் கொடுத்தனர். பின்னர் ஏனையோருக்கும் ஊறணி வைபர் வாயிலாக அறிவிக்கப்பட்டதோடு Zoom கலந்துரையாடலுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

Zoom கலந்துரையாடல்


ஊறணி வரலாற்று நூலுக்கான Zoom கலந்துரையாடல் 12.12.2021 அன்று SL நேரம் இரவு 7.30 மணிக்கு 18 அங்கத்தவர்களின் பங்கு பற்றல்களோடு நடாத்தப்பட்டது. இதில் இதழ் ஆசிரியர் அருட்திரு.கு.அன்ரனி பாலா அடிகளார், இதழ் ஆலோசகரும் பங்குத்தந்தையுமான அருட்திரு. T.தேவராஜன் அடிகளாருடன் இதழ் ஆலோசகர்களான அருட்திரு. RCX. நேசராஜா அடிகளார், அருட்சகோதரி.ஆ.நிர்மலா ஆகியோர் கலந்து கொண்டனர்.
வெளிநாடுகளிலிருந்து எட்டு உறவுகள் தங்கள் நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்டு வலுச்சேர்த்தார்கள். தாயகத்திலிருந்து மேற்படி ஆலோசகர்கள் உள்ளடங்கலாக பத்து உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

வெளிநாடுகளிலிருந்து கலந்து கொண்ட பிரதிநிதிகள்.

பிரான்ஸ் – திரு. ம.அருள்நேசன், திரு. பா.ஜ.விமலதாஸ்.

லண்டன் – திருமதி. இ.ஆனந்தி, திருமதி.நி.ஜெயராணி

ஜேர்மன் – திருமதி.டொ. பெனடிக்ரா

சுவிஸ் – திருமதி . B. இசபெல்லா

நோர்வே – திரு.ஜோ.ரட்ணராஜா

ஹொலன்ட் – திருமதி.நி.சாந்தி

ஆகியோர்களுடன் தாயகத்திலிருந்து மேற்படி ஆலோசகர்களுடன் திரு.மே.சாந்தசீலன், திருமதி.பி. றூபினி, திருமதி.யூ.சாந்த சீலி, திரு.பி.றெஜிறஜீவன், திரு.இ.விஜயகுமார், திரு.அ.சூரியன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

About ratna

slot anti rungkat 2023>BEJOBET: Situs Slot Online Gacor Anti Rungkat Terbaru 2023 slot anti rungkat 2023>MPOSUN: Link Situs Judi Online Slot Gacor Terbaru slot gacor >BEJOBET: Situs Judi Online Slot Gacor Terbaik Di Indonesia slot gacor 2023 > daftar situs slot gacor 2023 terpercaya nomor 1 Di Indonesia Gampang Menang