யா/ ஊறணி கனிஷ்ட வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கக் கூட்டம்.
காலம் :- 20.11.2022
இடம்:-ஊறணி புனித அந்தோனியார் ஆலய முன்றல்
பாடசாலையின் அதிபர் திரு. பா.செந்தூரன், ஊறணி புனித அந்தோனியார் ஆலய பங்குத்தந்தை அருட்திரு. தி.தேவராஜன் அடிகளார் மற்றும் பாடசாலையின் பழைய மாணவர்களின் பங்குபற்றுதலுடன் கூட்டம் நடைபெற்றது.
ஒரு நிமிட நேர அக வணக்கத்துடன் கூட்டம் ஆரம்பமானது.கூட்டத்தை பாடசாலை அதிபர் திரு. பா.செந்தூரன் அவர்கள் தொடக்கி வைத்தார். முறைப்படி இன்று மீண்டும் பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தை மீழுருவாக்கம் செய்வதையிட்டு தான் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்தார்.
கல்வி அமைச்சின் சுற்று நிருபத்திற்கு அமைய மாதம் இரு தடவைகள் பழைய மாணவர் சங்க நிர்வாகக் குழுக் கூட்டம் இடம் பெற வேண்டுமென்றும் பெரும்பாலும் வலயக் கல்விப் பிரதிநிதிகளின் பிரசன்னத்தில் கூட்டம் நடைபெறுமென்றும் அவர் தெரிவித்ததோடு சங்கத்தை வினைத்திறனாக தொடர்ந்து இயங்க முன் வருமாறு வேண்டுகோளையும் முன்வைத்தார்.
அவரின் கருத்துரையைத் தொடர்ந்து நிர்வாகம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. முதலில் செயலாளர் தெரிவு இடம் பெற்றது.
செயலாளராக திரு.அ. அருள் ஜெயரட்ணம் ( சூரியன்) ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார். திரு.தே.மனோரஞ்சன் முன்மொழிய திரு.இ.விஜயமனோகரன் வழி மொழிந்தார்.
தொடர்ந்து செயலாளர் கூட்டத்தை வழிநடத்த நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டார்கள்.
ஒரே பார்வையில் பாடசாலையின் பழைய மாணவர் சங்க நிர்வாகிகளின் முழு விபரம் வருமாறு.
- தலைவர் (பதவி வழியாக):- திரு. பா.செந்தூரன் (அதிபர்)
- செயலாளர்:-
திரு.அ. அருள்ஜெயரட்ணம் (சூரியன்) - பொருளாளர்:-
திரு.செ. கயித்தாம்பிள்ளை (ஜோன்சன்)
4.உபதலைவர்:-
திரு.தே.மனோரஞ்சன்
செயற்குழு உறுப்பினர்கள்
- திருமதி.ஜே.தர்மினி
- திரு.இ.விஜேந்திரன்
- திருமதி.சு.குயின்டின்
- திரு.க.வரதராஜா
- திருமதி.வி.மங்களா
- திரு.இ.விஜயமனோகரன்
போசகர் :- ஊறணி புனித அந்தோனியார் ஆலய பங்குத் தந்தை.
ஆகியோர் தெரிவு செய்யப்பட்டார்கள்.
நிர்வாகத் தெரிவைத் தொடர்ந்து அதிபர் மூலம் பெறப்பட்ட பழைய மாணவர் சங்க யாப்பு செயலாளரால் முன்வைக்கப்பட்டு – அனைவருக்கும் வாசித்து சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. அதன் நகல் மேலும் திருத்தங்களுக்காக – வெளிநாடு வாழ் பழைய மாணவர்களுக்காக இங்கே பதிவிடப்படும். அனைவரும் சந்தா செலுத்தி உறுப்பினர்களாக இணைய வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
உடனடியாகவே 7 உறுப்பினர்கள் அன்றே, ஆண்டு சந்தா 600 ரூபா செலுத்தி சங்கத்தில் இணைந்து கொண்டனர்.
கலந்துரையாடல்கள் மூலம் மேலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை வருமாறு.
இணைந்து கொண்ட ஓர் உறுப்பினர் சங்க வளர்ச்சியின் நிமித்தம் தனக்குத் தெரிந்த – தனது வயதுப் பிரிவினர் 5 பேரை சங்கத்தில் இணைத்தல்.
பாடசாலை அபிவிருத்திச் சங்கக் கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக பழைய மாணவர் சங்கப் பிரதிநிதிகளாக திரு.க.வரதராஜா மற்றும் திரு.தே.மனோரஞ்சன் ஆகியோர்
பெயரிடப்பட்டனர்.
எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை (27.11.2022) வெளிநாடு வாழ் பழைய மாணவர்களுடன் Zoom கூட்டத்தை நடாத்துதல். நடை பெறும் Zoom கூட்டத்தில் திரு.சூரியன், திரு.ஜோன்சன், திரு.மனோ கலந்து கொள்வர். விரும்பின் தாயகத்திலிருந்து ஏனைய பழைய மாணவர்களும் கலந்து கொள்ளலாம்.
பொன்விழா
எதிர்வரும் சித்திரை மாதம் ஓர் பொருத்தமான நாளில் பொன் விழாவை நடாத்துதல். அதில் நூல் வெளியீடு செய்தல்
பாடசாலையின் பழைய மண்டபம் திருத்துதல் சம்பந்தமாக zoom இல் கலந்துரையாடி முடிவெடுத்தல்.
திருத்தப்படும் மண்டபத்திலேயே Smart room ஐ கண்ணாடி Room ஆக அமைத்தல் தொடர்பாக Zoom இல் கலந்துரையாடல்.
Zoom கூட்டத்தைத் தொடர்ந்து எதிர்வரும் தை மாதம் 4 ஆம் திகதி மீண்டும் சங்கத்தின் செயற்குழு கூடுதல்.
இத்தீர்மானங்களைத் தொடர்ந்து கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.