# யாழ் மறை மாவட்டத்தின் பெரும்பாலான பங்குகளில் நடைமுறையில் உள்ளதிற்கிணங்க வெளி நாடு வாழ் ஊறணி பங்கு மக்களுக்கான வருட சந்தா 15000/= ( இலங்கை ரூபாவாக) தீர்மானிக்கப்பட்டது.
# ஒவ்வொரு வருடமும் தீர்மானிக்கப்படுகின்ற பெருநாள் காசு – தாயக, வெளிநாடு வாழ் பங்கு மக்கள் அனைவரும் செலுத்துதல்.
# 2019, 2020 ஆம் ஆண்டுகளுக்கான ஆலய கட்டட நிதி 10000/= ஐ (5000 + 5000) தாயக மக்கள் அனைவரும் விரைவாக கட்டி முடித்தல். அது கட்டி முடிக்கும் வரை நிலுவையாகவே இருக்கும்.
இதனையும் கருத்தில் கொள்க
—————————————————-
எமது புதிய ஆலயக் கட்டுமானத்தின் நிதிப் பங்களிப்பின் பெரும் பகுதியை வெளிநாடு வாழ் உறவுகளே வழங்கியிருந்தீர்கள்.உங்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இருந்த போதிலும் மேலும் எமது அந்தோனியார் தொடர்ந்தும் கடனாளியாகவே இருக்கின்றார். எமது பொருளாளர் தந்த கணக்கின் பிரகாரம் 2525497 ரூபாவிலிருந்து சிறிது குறைந்திருக்கின்ற போதும் தொடர்ந்தும் 1940497 ரூபா கொடுக்கப்பட வேண்டிய கடனாகவே இருந்து வருகின்றது.
மேற்படி 1940497 ரூபாக் கடனைக் கொடுப்பதற்கு தங்களால் முடிந்த தொகையை வழங்கி உதவுமாறு ஊறணி அந்தோனியாரும் ஆலய நிர்வாகமும் கேட்டு நிற்கின்றனர்.
Urany viber