பல தசாப்த காலமாக ஊறணி கிராம அபிவிருத்திச் சங்கத்தின் காணி உறுதியானது உரிய முறையில் சங்கத்தின் பெயரில் இல்லாதிருந்தமை மூத்தோர் பலருக்கும் தெரிந்திருக்கும். 1990 ஆம் ஆண்டிற்கு முற்பட்ட காலத்தில் இக்காணி தொடர்பாய் ஏற்பட்ட பிரச்சினைகளால் எமது உறவுகள் சிலர் சொல்லணாத் துன்பத்திற்கு ஆளானமையும் இங்கு நினைவுகூரத்தக்கது.
காணி சங்கத்தின் பெயரில் இல்லாததால் கரப் பந்து (VoIIey ball) விளையாடிய மைதானத்தில் எந்த ஒரு அபிவிருத்திப் பணிகளிலும் ஈடுபட முடியாதிருந்தது. ஆனால் தற்போது மொத்தம் 3 பரப்பும் 13 குழியும் உள்ள காணியின் உறுதியானது யாழ் மேற்றாசனத்தால் ஒப்பமிட்டு ஊறணி கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கே கையளிக்கப்பட்டிருக்கின்றது. இது கைகூட பாடுபட்டு அதனைப் பெற்று கடந்த அருட் பணிச்சபைக் கூட்டத்தில் வைத்து எமது பங்குத்தந்தை அருட்திரு. T.தேவராஜன் அடிகளார் ஊறணி கிராம அபிவிருத்திச் சங்கத்தலைவரிடம் ஒப்படைத்தார். பங்குத்தந்தந்தைக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிப்பதோடு இதற்காக மேலும் உழைத்த சங்கத் தலைவர் யோகராஜாண்ணா மற்றும் ஏனையோருக்கும் எமது பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Urany viber