‘நன்று நன்று நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே,. …..உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்குகொள்ளும்’ மத் 25: 21-23
என்ற நாயகன் இயேசுவின் அழைப்பிற்கு தகுதிபெற்றவனாய் தொண்டாற்றியவர் நம் உள்ளம் கவர்ந்த அருளாளன் அருளப்பு.
கண்ணீரில் தோய்ந்து நிற்கும் அவரது அன்பு மனைவிக்கும் பாசமிகு பிள்ளைகள் அஐந்தா வினோஜா சுயந்தா குடும்பத்தினருக்கும் உடன்பிறவிகளான அன்ரன் இன்பராணி உறவுகளுக்கும் காலஞ்சென்ற மரியதாஸ் பிள்ளைகளுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
கோவில் பணியாளனை, ஊறணி தந்த சிறந்த சமுகத் தொண்டனை பறிகொடுத்துத் தவிக்கும் ஊரவரோடிணைந்து செய்வதறியாது கண்கலங்கி நிற்கின்றேன்.
ஊரையும் வேரையும் இறுக்கமாக அணைத்துக் கொண்டு வாழ்ந்த அவரது நல்லடக்கம் ஊறணி மண்ணிலேயே நடைபெறுவது மிகவும் பொருத்தமானதே. அப்பகுதி விடுவிக்கப்பட்டதும், சூட்டோடு சூடாக தற்காலிக கோவிலமைத்து வழிபாடு செய்யத் தொடங்கியதும் செவ்வாய் தவறாது அந்தோனியார் ஆதரவை நாடிச்சென்று ஆவன செய்ய வாய்ப்புக் கிடைத்ததும் இந்த நாளுக்கென்றே முன்னேற்பாடக நடந்தன என்றே சொல்லத் தோன்றுகின்றது.
வேதாகமத்தில் அருளப்பபு என்பது புனிதமான பெயர்;.
இயேசுவின் முன்னோடியாக அனுப்பப் பட்டவர் (ஸ்நாபக) அருளப்பர்.
பழைய ஏற்பாட்டையும் புதிய ஏற்பாட்டையும் இணைக்கும் பாலமானவர் அவர்.
இடம்பெயர்வின்பின் பழைய ஊறணியையும் புதியதையும் இணைக்கும் பாலமானவர் நம் நண்பன் அருளப்பு. பொறுபு;புகள் கொடுக்கப்பட்டனவோ இல்லையோ முன்னும் பின்னும் பொறுப்பாகவே நடந்துகொண்டவர் இவர். இருந்தும், எப்படி இயேசுவின் பணியை; காண ஸ்நாபக அருளப்பர் கொடுத்து வைக்கவில்iயோ அதுபோலவே புதிய ஊறணியையும் அனுபவிக்க இவருக்கும் கிடைக்கவில்லை.
புதியதை கட்டியெழுப்ப உள்ளும் புறமும் சங்கங்கள் அமைத்துதொடர்புகளையும் உறவுகளையும் வளர்க்க urany.com,uraniyaar,viber யும் அறிமுகப்படுத்தி நல்ல பல கருத்துக்களையும் உணர்வுகளையும் கட்டுரைகளாகவும், கவிதைகளாகவும் வடித்து உற்சாகமாய் ஈடுபடும் அனைத்து உறவுகளுக்கும் இவரது மறைவு பெரும் தாக்கமே, தளர்ச்சியே.
ஆனால் ஸ்நாபக அருளப்பரின் மறைவோடு புதுவாழ்வின் வளர்ச்சி தடைப்படவில்லை. உத்வேகத்தோடு வளர்நத்து, படர்ந்தது, நன்றாக விழைந்தது. அப்படிச் செயல்;படுவதே மறைந்த நம் பணியாளனுக்கு நாம் செய்யும் நன்றிக் கடனாகும்
சீந்திப்பந்தல் அவருக்கு தற்காலிகமானது. தாயகமாம் ஊறணியில் மீளக் குடியேறவே காத்துக் கொண்டிருந்தார். இன்று ஊரே கலங்கிநிற்க அவரது பூதவுடல் மட்டுந்தான் திரும்பிச் செல்கின்றது.
ஊறணியும் நமக்கு நிரந்தரமானது அல்ல. நமக்கோ வானகமே தாய்நாடு. (பிலி 3:20-21)
அன்பன் அருளப்புவின் கோவில் பணியும் வழிபாடும், அந்தோனியார் பக்தியும்; அதை நோக்கிதே. கோவில் பணியில் தன்னை அர்ப்பணிந்திருந்தவர் சாவை வென்று உயிர்த்தெழுந்த நாயகன் இயேசுவின் பெருவிழாவைக் கொண்டாடும் வாரத்தில் இறைபதம் அடைந்துள்ளார், இவருக்கும் அப்பபுனித வாழ்வு நித்தியமாக உரித்தாகட்டும் என வாழ்த்துவோம், நம்புவோம்.
பூவும்; புல்லும் போல புவியில் வாழ்கின்றாய்
பூவும் உதிர்ந்துவிடும்
புல்லுமுதிர்ந்துவிடும்.
இறைவன் யேசுவே
இறப்பைக் கடந்தவர்
ஆவரில் நிலைப்பவர்
இறந்தும் வாழ்கின்றார்.
FR.T.E.T. ராஐன்