கெபி அமைந்துள்ள அதன் முன்னோரமே ஊற்றணிகளின் போக்கிடம். அதன் காரணமாகவே ஊறணி எனும் பெயர் நம்மூருக்கு ஏற்பட்டிருக்கலாம் என முன்பொரு வரைவில் குறிப்பிட்டுள்ளதை நினைவிற்கொள்ள
மீண்டுமொரு வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அண்மையில் யோசை மாமா எழுதிய ‘வரலாறு’ எனும் தொகுப்புச் செய்திகளை அறிந்துகொள்ள ஊறணி இணையத்துள் ஊழ்கியபோதுஇ கரையோர ஊற்றைக் காரணமாக்கியே அப்பெயர் ஏற்பட்டதாக அவரும் குறிபிட்டுள்ளதுதான் அதுவாகும்.
இப்படிக் காங்கேசன்துறையில் ஓர் ஊறணி அமைந்திருப்பதைப் போன்றே வல்வெட்டிதுறையிலும் ஓரூருண்டு. அதனால் அதற்கும் ஊறணி என்றே பெயரிடப்பட்டுள்ளது. இவற்றைவிட மட்டக்கிளப்பிலும் ஊறணி உண்டு. ஆனால் அதன் பழைய பெயர் ஊருணியாகும். உண்ணக்கூடிய நீரைத் தன்னகத்தே கொண்டிலங்குவ்தால் அது ஊருணி எனப்பட்டது.
(ஊரு + உண்ணி ஊருண்ணி – ஊருணி
உண்ணி உண்பவன் உண்பவள் ஊர் ஊரின் மக்களைக்குறிப்பதாகும்.)
இவைபோக தமிழ்நாட்டிலும் ஓரூரின் பெயர் மூங்கில் ஊறணி என வழங்கிவருகின்றது. பகுதிச் சொல்லுடன் கூடியதாக இவ்வூறணி அமைந்திருப்பதால் மேலும் இவ்வகையோ பெயரெச்சத்துடன்கூடியவையோ அங்கு இருக்கக்கூடும். இருக்கக்கூடும் என்றவுடன் மீளவும் நினைவுக்கு வருவது மீன்பாடும் தேனாட்டில் அமைந்துள்ள சின்ன ஊறணிதான். மட்டுநகர் ஊறணியிலிருந்து குடியகன்ரோரே அங்கு சென்று குடியேறி இருக்கலாம். அதன் காரணமாக தாய் – சேய் உறவு நோக்கில் அப்பெயர் இடப்பட்டிருக்கலாம் என நம்ப இடமுண்டு. இதற்கு கீழுள்ள பெயர்களையும் எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.
மட்டக்களப்பு ஊறணி – சின்னஊறணி – குடியேற்றம்
பரந்தன் – குஞ்சுப்பரந்தன் – குடியேற்றம்
பெரியவிளான் – சிறுவிளான் – குடியேற்றம்
பெரியமடு – சின்னமடு – கோவில்
ஈழம் – ஈழம் – குடியேற்றம்
ஆகவே புலம் பெயர்ந்து புதிய மண்ணில் குடியேறி வாழமுற்படும் மண்ணவர் எவரும் தாய் மண்ணுடனான உறவையும் விழுமியங்களையும் காலம் காலமாக நினைவிற் கொள்ளும் முகமாகவே இவ்வகைப் பெயர்களை தம் குடியிருப்புகளுக்கு இட்டு வந்திருக்கின்றனர்.நம் மரபு விழுமியங்களைப் பேணிப் புரக்க விரும்பும் மண் நேயருக்கு இதுவொரு வழிகாட்டி என்பதில் ஐயமில்லை.
எனினும் இப்போதைய சிக்கல் என்னவென்றால் அமையவிருக்கும் குடியிருப்பை சின்ன ஊறணி என்பதா இல்லை ஊறணியூர் என்பதா என்பதுதான். கரையூர் பாசையூர் என்று தமிழீ்ழத்திலும் மேட்டூர் காட்டூர் பாலூர் என்று தமிழ்நாட்டிலும் பகுதிச் சொல்லோடு விகுதியாக ஊர் இணைக்கப்பெற்று பெயராக வழங்கி வருவதனால் ஊறணியூர் என்று அழைக்கலாமே என்றொரு கருத்துண்டு. அப்படியானால் மாரீசன்கூடலும் போயிட்டியும் முறையே பட்டினமாகவும் நகரமாகவும் மாறிவிட்டதாக்கும் என்றொரு எதிர்க் குத்தலுமுண்டு.
பாரீசிலிருந்து இங்கு வந்து வாழும் வேலணையூர்-பொன்னண்ணா அவர்களிடம் எதற்காக வேலணையூரையும் பெயரோடு சேர்த்துக் குறிப்பிட்டு வருகிறீர்களெனக் கேட்டபோது தனது பெயர் பொன் தியாகராசாவாம் ஆனால் அப்பெயரில் இன்னொருவரும் மரபுப் பாடலை எழுதி வந்தபடியால் பொன்னோடு அண்ணாவைப் பிணைத்து பொன்னண்ணா என்ற பெயரில் பாடல்களை எழுத முற்பட்டதாகவும் அப்போதும் அப்பெயரில் ஒருவர் எழுதிவருவது தெரியவரவே வேறு வழியின்றி வேலணையூரைச் சேர்த்தேன் என்கிறார் வேலணையூர்-பொன்னண்ணா நொந்தபடியே. ஆக ஊரைச் சேர்த்து எழுதியமைக்கு வலுவான அல்லது சிறப்பான காரணியென்று எதனையும் இதில் நாம் காணமுடியவில்லை.
ஒரு நாட்டின் அடிக்கட்டுமான அளவீட்டின் பொதுக் குறியீடாக இருந்து வருவதும் ஊர்தான். அதன் அகக்கட்டுமான வரையறவிற்குரிய குமுகாயம் பொருண்மியம் செயலவையாக அமைந்தவற்றையும் சிறப்பாக வெளிப்படுத்தி நிற்பதும் ஊர்தான். பின்னர் இது பட்டினம் நகரம் மாநகரம் என்றோ அவற்றிற்கான அவைகள் என்றோ வளர்ச்சியும் வளமும் காரணமாகப் பிரிக்கப்பட்டாலும் மாவட்டம் மாகாணம் நாடென உயர் கட்டுமான உச்சத்தைப் பெற்றாலும் இவற்றிற்கெல்லாம் அடிப்படையாக இருந்து வருவவை ஊர்கள்தான் என்பதில் மற்றில்லை. இப்படி சிறப்பானதும் நிறைவானதுமான பொருண்மைப் பயன்பாட்டை ஊர் வழங்கி நிற்கையில் அதற்கும் குறைவானதொரு நிலையை நாம் ஏன் ஏற்ப்படுத்த வேண்டும்? சொற்களை வகை வகையாக பிரித்துப் பகுத்த நாம் அறிவு மரபினர் அவற்றின் ஒவ்வொரு சொல்லையும் பொருண்மைக் கண் கொண்டுதானே செஞ்சொல்லாக ஆககியிருப்பர்.
ஒப்புரவன்
வடசொற்கள் தமிழ்ச்சொற்கள்
சமூகம்இ சமூதாயம் குமூகம்இ குமுகம்இ குமூகாயம்
தமிழ்ச்சொற்களை வடசொல்லால் குறிக்கவேண்டாம். காற்புள்ளி முற்றுப்புள்ளிகளை. இட்டே மொழித்தொடர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை அப்படியே பின்பற்றல்தான் தொடர் அழகை வழங்கும் ….ஒப்புரவன், 06.10.2004