ஊறணியின் பங்குத்தந்தை அருட்திரு தி.தேவராஜன் அடிகளாரின் தலைமையில் கூட்டப்பட்ட ஊறணி அனைத்து அமைப்புக்களின் நிர்வாகிகள் பங்குபற்றிய கூட்டத்தில் எடுக்கப்பட்ட சீந்திப்பந்தல் காணி தொடர்பான முடிவுகள் வருமாறு :-
- அனைத்து புலம் பெயர் ஊறணி வாழ் மக்களின் ஏகோபித்த ஆதரவின் பிரகாரமும் தாயக வாழ் ஏகோபித்த ஆதரவின் பிரகாரமும் சீந்திப் பந்தல் பொதுக் காணியை ஏலத்தில் விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
- ஊறணியை சொந்த இடமாகக் கொண்ட நபரோ அல்லது குடும்பமேதான் இக்காணியை ஏலத்தில் எடுக்க முடியும்.
- இக்காணி ஒன்றரை பரப்புக் கொண்டது.(இரண்டு லட்சம் ரூபா பெறுமதியான சுற்று மதிலும் மற்றும் குழாய்க்கிணறும் காணப்படுகிறது) இதன் ஆரம்ப விலை ஏழு லட்சம் ரூபாய் (இலங்கை ரூபா 700000 )
- இக்காணியை வேண்டுபவர் மீண்டும் விற்க நேர்ந்தால் ஊறணியை சொந்த ஊராகக் கொண்டவருக்கோ அல்லது தனது பிள்ளைகளுக்கோ அல்லது தன் இரத்த வழி வந்தவர்க்கோதான் மறுபடியும் விற்க முடியும் – இதை உறுதிப்படுத்தும் விதமாக ஆவணம் முடிக்கப்படும்.
- ஊறணி வைபரில் மட்டுமே இக்காணி ஏலம் விடப்படும்.
- இச்செய்தி பதிவேற்றப்படும் இக்கணத்திலிருந்து ஏலம் ஆரம்பமாகிறது. ஏலத்தின் இறுதித் திகதி 30.04.2019 (இலங்கை நேரம்) நள்ளிரவு 12 மணி வரை. இத்திகதி நேரத்திற்கு பின்னர் வரும் ஏலம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.