திரு.அ.சூரியனின் அறிமுக உரையைத் தொடர்ந்து மலர் ஆசிரியர் அருட்திரு.கு.அன்ரனி பாலா அடிகளாரின் விளக்கவுரை இடம் பெற்றது.மலரின் ஆலோசகர்களாக ஊறணியில் பிறந்தவர்களான குருக்கள், அருட்சகோதரிகள் என்போர் இடம் பெற வேண்டுமென அவர் மீள வலியுறுத்தினார். ஆலய திறப்பு விழாவின் போது நூல் வெளியிடப்படவிருப்பதால் விரைவாக நூல் அச்சுப்பெறுவதைச் சுட்டிக்காட்டினார். அத்துடன் நூல் ஆக்கத்தில் எதிர்கொள்ளவிருக்கும் கடினத் தன்மையையும் எடுத்துரைத்தார்.
தனது பரம்பரைகள் தொகுப்பு நூலில் ஊறணியைச் சேர்ந்த 414 குடும்பங்கள் தற்போது வரை பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து அருட்திரு RCX. நேசராஜா அடிகளார் – நூலில் இடம் பெற வேண்டிய துறைகள் சரிவர தீர்மாணிக்கப்பட வேண்டுமென்றும் துறைசார்ந்த நிபுணத்துவமுள்ளவர்கள் பொறுப்புக்களில் அமர்த்தப்பட வேண்டும் எனவும் எடுத்தியம்பினார். அத்துடன் ஆக்கங்களை பக்கச்சார்பின்றி பொதுவான ஆக்கங்களாக எழுத வேண்டுமெனவும் அனைத்து தகவல்கள் தரவுகளைப் பெற்று மலர்க்குழுவே ஆக்கங்களைத் தொகுத்து எழுத வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
திரு.மே.சாந்தசீலன் – முக்கிய துறைகளில் உப பிரிவுகளும் சேர்க்கப்பட்டு தரவுகள் பெறப்படுமாயின் இலகுவானதாக இருக்குமென சுட்டிக்காட்டினார்.
எமது பங்குத்தந்தையவர்கள் ஒற்றுமையை வலியுறுத்தியதோடு நூல் ஆக்கத்தில் இடம் பெற வேண்டிய நேரமுகாமைத்துவம் பற்றியும் எடுத்துச் சொன்னார். அருட்சகோதரி.ஆ.நிர்மலா அவர்கள் நூலில் தனது பணி சிறப்பாக இருக்கும் என உறுதியளித்தார். மேலும் பலரும் தமது கருத்துக்களை ஆர்வமுடன் முன்வைத்தார்கள்.
விடுபட்ட பொறுப்புக்கள் கலந்துரையாடல் மூலம் பகிர்ந்தளிக்கப்பட்டன.
துறைகளின் பிரிவுகளும் பொறுப்புக்களும்.
- ஊர் வரலாறு (திருமதி.பி. றூபினி, திருமதி.ஞா.லதா )
I. கிராமத்தின் தோற்றம்
II. மூதாதேயர் விபரம்
III. கல்வியும் வளர்ச்சியும்.
IV. ஊர் அபிவிருத்திச் சங்கத்தின் வளர்ச்சி.
V. வாசகசாலை, முன்பள்ளி, பாடசாலையின் வளர்ச்சி.
VI. ஊரின் வளர்ச்சிக்கு உதவிய அரச,அரச சார்பற்ற நிறுவனங்களும் அவைகளின் சேவைகளும்.
VII. ஊரின் வளர்ச்சிக்கு உதவியோர் விபரம்.
VIII. மண் மீட்பிற்காய் ஆகுதியானோர்.
02.ஆலயங்களின் வரலாறு.(திருமதி.ஞா.லதா, திருமதி.பி. றூபினி)
l.ஆலயங்களின் தோற்றம் (ஆதியில் கொட்டில் ஆலயத்திலிருந்து இன்று வரை மொத்தம் 4 ஆலயங்கள் )
II.பங்குத்தந்தையர் விபரம்.(ஆதியிலிருந்து ஆண்டு வாரியாக இடம் பெறல்)
III. ஆன்மீக வளர்ச்சி.(அருட்சகோதரி.ஆ.நிர்மலா.)
IV. ஊர் குருக்கள், அருட்சகோதரிகள் விபரம்.
V. பீடப் பணியாளரும் பாடகர் குழாமும் விபரம்.
VI. மூப்பர் / சங்கிலித்தாம் விபரம்
VII. பக்திச் சபைகள்.
VIII. திருவழிபாட்டு முறைகளும் (ஆதியிலிருந்து இன்று வரையான) மாற்றங்களும்.
IX.கரோல் குழுவின் முக்கியத்துவம்.
X. ஆலய வளவும் மக்களும்.
- கலை பண்பாடு.(திரு.அ.கா.புஸ்பராசா, திருமதி. இ.ஆனந்தி.)
I. நாட்டுக் கூத்துக்களும் அவைகளை ஆக்கியோர் விபரமும்.
II அவைகளைப் பழக்கியோர் – அண்ணாவியார்கள், நடித்தோர் விபரம்.
III. நாடகங்கள்.
IV. அவைகளை ஆக்கியோர், பழக்கியோர், நடித்தோர் விபரம்.
V. நடனம்.
VI. கலை, கலாச்சாரப் போட்டிகள்.
VII. கோட்ட, வலய, மாவட்ட ரீதியாக வெற்றி பெற்றோர் விபரம்.
VIII. வெளியீடாக வெளி வந்த கவிதை, கட்டுரை, ஏனைய ஆக்கங்கள் பற்றிய விபரங்கள்.
- விளையாட்டுக்கள். ( திரு.அ. பிலிப் லியோனாட், திரு.இ.யூட் விஜய மனோகரன்.) I. ஊரில் விளையாட்டுக்களின் வளர்ச்சி.
II. பாரம்பரிய விளையாட்டுக்கள். (தாச்சி, கிட்டியும் புள்ளும், ஐஸ் ஹோல், கள்வன் பொலீஸ்,
ரவுன்டஸ், போளை அடித்தல், கடற்கரை மணல் விளையாட்டுக்கள் )
III. பெரு விளையாட்டுக்கள். (உதைபந்து, வலைப்பந்து, துடுப்பாட்டம், கரப்பந்து.
IV. உள்ளக விளையாட்டுக்கள். (கரம்,பூப்பந்து,)
V. போட்டி விபரங்கள்.
VI. இல்ல விளையாட்டு விழாக்கள்
VII. அவைகளைப் பொறுப்பாக நடத்தியோர் விபரம்.
VIII.ஊருக்கு வெளியில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றியீட்டியோர் விபரம் (கோட்ட, வலய, மாவட்ட ரீதியாக.) - தொழில்கள் (திரு.செ.ஜோன்சன், திரு.மே.சாந்தசீலன்)
I. ஊர், வெளியூர் தொழில்கள்.
II. தொழில்களின் தோற்றமும் வளர்ச்சியும்.
III.சம்மாட்டிமார்களின் விபரம்.
IV. அரச, அரச சார்பற்ற வேலை வாய்ப்புக்கள்.
- இடம் பெயர் வரலாறு (மேற்படி 5 துறைகளும் உள்ளடங்கியதாக இடம் பெயர் வரலாறு பதிவு செய்யப்படும். தகவல்கள், தரவுகள் சேகரிப்பவர்கள் கவனத்திற் கொள்க.)
குறிப்பு :- தகவல்கள், தரவுகள் சேகரிக்கும் பொறுப்பிலுள்ளோர் வயதில் மூத்த பிரஜைகளிடமிருந்து ஓடியோ, வீடியோ பதிவுகளைப் பெறும் போது மேற்படி துறைகள் மற்றும் உப பிரிவுகள் என்ற ஒழுங்கு முறையிலும் மிகத் தெளிவான முறையிலும் பதிவு செய்வது விரும்பத்தக்கது. ஏனெனில் இப்பதிவுகளைக் கூட நாம் சிறந்த ஆவணங்களாகப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
வெளிநாடு வாழ் ஊறணி மக்களின் பங்களிப்பு.
நூலில் இடம் பெற வேண்டிய மேற்படி 5 துறைகள் மற்றும் உப பிரிவுகள் தொடர்பான விபரங்களை வெளிநாடுகளைப் பிரதிநிதிப் படுத்தும் உறுப்பினர்கள் தங்கள் நாடுகளில் எம் உறவுகளிடம் பெற்று தாயகத்திலுள்ள துறைரீதியான பொறுப்பாளர்களுக்கு அனுப்பி வைப்பார்கள். பதிவுகள் வீடியோவாகவோ, எழுத்து மூலமாகவோ இடம் பெறல் வேண்டும். விரும்பியோர் நேரடியாகவே மேற்படி முறைகளில் தாயகத்திற்கு அனுப்பி வைக்கலாம். தகவல்கள், தரவுகள் யாவும் மலர்க்குழுவின் கைகளில் கிடைக்க வேண்டிய இறுதித் திகதி ஜனவரி 31 ஆகும்.மலர்க்குழு இவைகளைப் பகுத்து மலருவாக்கத்தைச் செய்யும். உறவுகள் அனைவரும் தமது பூரண ஒத்துழைப்பை நல்குவீர்களென எதிர் பார்க்கின்றோம்.
நூலின் முகப்பு அட்டை
தகவல்கள், கனதிக்கு அமையவும் தற்காலப் போக்கிற்கு ஏற்பவும் துறைசார்ந்த உறவுகளின் ஆலோசனைகளையும் பெற்று முகப்பு அட்டை வடிவமைக்கப்படும். இப்பணியை அருட்திரு Rcx. நேசராஜா
அடிகளார் தாமே முன் வந்து செய்து தருவதாக ஏற்றுக் கொண்டார்.
நிறைவு
மலர்க்குழுவின் முடிவே இறுதி முடிவுகளாக நூல் பதிவேற்றம் செய்யப்படும் என்றும் தொடர்ந்தும் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்கள் ஒழுங்கு செய்யப்பட வேண்டும் என்ற கருத்துக்களோடும் Zoom கலந்துரையாடல் நிறைவுக்கு வந்தது.