ஊறணி காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும், அவுஸ்ரேலியா மெல்போனை வசிப்பிடமாகவும் கொண்ட அன்ரன் ஞானசீலன் அந்தோனிமுத்து இன்று 12.04.2021 இறைபதம் ஏய்தினார்.
அன்னார் காலம் சென்றவர்களான அந்தோனிமுத்து, அன்னம்மாவின் அன்பு புதல்வனும், அசம்ரா தேவராணியின் அன்பு கணவரும், அன்ரனி ஜீவராஜ் (டினேஷ்), பிரான்சிஸ் (சதீஷ்) மற்றும் மேகி டிலானி ஆகியோரின் அன்பு தந்தையுமாவார். அன்னாரின் ஆன்மா நித்திய இளைப்பாற்றிக்கு இறைவனை பிராத்திப்போம்.
——————————————————————————————————————
அமரர் ஞானசீலன் . அந்தோனிமுத்து தம்பதிகளுக்கு மூத்தமகனாக 1947 ஆம் வருடம் ஆனி மாதம் 8 ஆம் திகதி ஊறணியில் பிறந்தார் எங்களுடைய பப்பாவின் சகோதரிகளின் பிள்ளைகளில் மூத்தவர்.நாங்கள் எல்லோரும் அண்ணன் என்றும் அத்தான் என்றும்
தான் அழைப்போம் . உலக வரலாறு அறிவுபூரமான விடயங்களை எங்களுக்கு சொல்வார் அத்துடன் படிக்கும் காலத்தில் படங்கள் நல்லா வரைவார். இளவாலை புனித கென்றியரசர் கல்லூரியிலும்.தெல்லிப்பளை யூனியன் கல்லூரியிலும் படிப்பை முடித்த பிறகு
வெளிநாட்டு கப்பலில் சில வருடம் வேலை செய்தார் பின் கடல்தொழில் இயந்திர உதிரிப்பாக கடை ஊறணியில் நடத்தி வந்தார் . இந்த காலப்பகுதியில் R D S இல் செயலாளராக பதவி வகித்தாரார் தலைவராக அருளானந்தம் இருந்தார் அமரர் அலங்கார கைவேலை அழகாக செய்வார் . யங்றோயல் கழகம் நாடாத்திய உதைபந்தாட்டம் சுற்றுப்போட்டியில் எமது ஊறணி கழகம் பங்குபற்றிய போது டென்மார்க்கில் இருக்கும் திரு அன்ரனுடன் சேர்ந்து முன் எமது கழகத்தை அரைஇறுதி வரை கொண்டு சென்றார் . 2ம் பிரிவில் சம்பியனாகவும் வந்தோம் அவர் மறைந்தாலும் இந்த நினைவுகள் நிலைத்திருக்கும் கொக்கிளாயில் மயிலிட்டி சிங்கராஜா சம்மாட்டியாரின் கரவலையை வாங்கி நடாத்தி வந்தார் . நான் யோகன், கருனா நாலு சம்மாட்டமாரின் பிள்ளைகள் கொக்கிளாய்மணலாறில் கரவலைநடாத்திவந்தோம். மணலாறில் இருந்து 1984 ம் வருடம் மார்கழி மாதம் தமிழிகிராமங்களில் இருந்து தமிழ் மக்களை விரட்டியடிக்கும் வரை தொழில் செய்து வந்தார்கள் பின் பெறுமதிமிக்க வலைகள் வள்ளங்களை சிங்களமக்கள் படையினரின் உதவியுடன் கைப்பற்றிவிட்டார்கள். பின் ஞானசீலன் 1988ம் ஆண்டு புலம்பெயர்ந்து அவுஸ்ரேலியாவில் குடியேறிவாழ்ந்து வந்தார். 2000 ம் ஆண்டு ஐரோப்பா நாடுகளுக்கு வந்து யுத்தகாலத்தில் எம் ஊர்மக்களுக்கு உதவி புரியும் நோக்கத்தோடு புலம்பெயர்ந்துவாழும் எம் ஊர் மக்களை சந்தித்து நிதி சேகரித்தார் அந்த நிதி சீந்திபந்தலில் காணி வாங்குவதற்கு உதவியாக இருந்தது…… நல்ல சேவைசெய்துவிட்டு இளைப்பாறி இருந்த போது கொடியபுற்றுநோய்யால் பாதிக்கப்பட்டு 2021 ஆம் ஆண்டு சித்திரை 12ம் நாள் மீளாய்துயில் கொண்டார் ஆக்கம் : ம. வில்லியம் அருள்நேசன்
Very interesting information!Perfect just what I was looking for!Raise your business